ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான் ஆதியாகமம் 39:2 * யோசேப்புத் தனது சொந்த சகோதரர்களால் விற்றுப்போடப்பட்ட பின்பு அடிமையாய் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்றாலும், தேவன் அவரது நிலைமையை, அடிமைத்தனத்திலிருந்து மாற்றி, முழுத் தேசத்திற்கும் அதிகாரியாய் மாற்றினார். * யோசேப்பின் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான திறவுகோல், தேவனுடனான அவரது ஆழமான உறவாகும். அவருக்குக் கஷ்டங்கள் இருந்தபோதிலும், அவர் விசுவாசத்தைத் தக்க வைத்துக் கொண்டார். தேவன் எப்பொழுதும் தன் பக்கத்தில் இருக்கிறார் என்றும் ஒவ்வொரு சவாலிலும் தன்னை வழிநடத்தினார் என்பதையும் உணர்ந்திருந்தார். இதன் விளைவாக, யோசேப்புப் பிரபலமடைந்து வெற்றிகரமான மனிதரானார்; அவருடைய ஞானம் மற்றும் நேர்மையினிமித்தம் பாராட்டப்பட்டார். * தேவனுடனான உங்கள் ஐக்கியத்தின் நிலை என்ன? இயேசுவுடனான உங்கள் உறவை நீங்கள் எவ்வளவு நெருக்கமாக வளர்த்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவாய் உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் மிகுந்த அதிகாரத்தையும் வெற்றியையும், சுதந்தரிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையில் உம்முடைய பிரசன்னத்தை தாரும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்முடன் நெருக்கமாயிருக்க எனக்கு உதவி செய்யும். வெற்றி மற்றும் நிறைவை நோக்கி என்னை வழிநடத்தும் வலுவான உறவை உருவாக்கும். ஆமென்.
தேவன் உங்களை ஓர் வெற்றிகரமான நபராய் மாற்றுவார்
“ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான் ஆதியாகமம் 39:2 * யோசேப்புத் தனது சொந்த சகோதரர்களால் விற்றுப்போடப்பட்ட பின்பு அடிமையாய் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்றாலும், தேவன் அவரது நிலைமையை, அடிமைத்தனத்திலிருந்து மாற்றி, முழுத் தேசத்திற்கும் அதிகாரியாய் மாற்றினார். * யோசேப்பின் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான திறவுகோல், தேவனுடனான அவரது ஆழமான உறவாகும். அவருக்குக் கஷ்டங்கள் இருந்தபோதிலும், அவர் விசுவாசத்தைத் தக்க வைத்துக் கொண்டார். தேவன் எப்பொழுதும் தன் பக்கத்தில் இருக்கிறார் என்றும் ஒவ்வொரு சவாலிலும் தன்னை வழிநடத்தினார் என்பதையும் உணர்ந்திருந்தார். இதன் விளைவாக, யோசேப்புப் பிரபலமடைந்து வெற்றிகரமான மனிதரானார்; அவருடைய ஞானம் மற்றும் நேர்மையினிமித்தம் பாராட்டப்பட்டார். * தேவனுடனான உங்கள் ஐக்கியத்தின் நிலை என்ன? இயேசுவுடனான உங்கள் உறவை நீங்கள் எவ்வளவு நெருக்கமாக வளர்த்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவாய் உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் மிகுந்த அதிகாரத்தையும் வெற்றியையும், சுதந்தரிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையில் உம்முடைய பிரசன்னத்தை தாரும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்முடன் நெருக்கமாயிருக்க எனக்கு உதவி செய்யும். வெற்றி மற்றும் நிறைவை நோக்கி என்னை வழிநடத்தும் வலுவான உறவை உருவாக்கும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

