← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுடைய வழி, அது சிறப்பான வழி
படத்தைப் பதிவிறக்கு

தேவனுடைய வழி, அது சிறப்பான வழி

“வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். சங்கீதம் 25:9 தேவனுடைய உதவியின்றி, இவ்வுலலகில் நாம் வெற்றிகரமாகவும் பரிசுத்தமாகவும் இருக்க முடியாது. இவ்விருண்ட உலகில் வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபை நமக்குத் தேவைப்படுகிறது. கர்ஜிக்கும் சிங்கத்தைப் போல நம் எதிரி வகைதேடிச் சுற்றித் திரிந்து, நம்மை வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறான் என்று வேதம் சொல்கிறது. இவ்வகையான கடினமான சூழ்நிலையில், இவ்வுலகத்தின் அசுத்தத்திலிருந்து விலகியிருக்க, நாம் எப்பொழுதும் கவனமாகவும், தேவ பக்தியுடனும் இருக்க வேண்டும். பல சமயங்களில், நாம் பயணிக்க வேண்டிய பாதையில், சரியானதைத் தீர்மானிப்பதில் குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்கும். நாம் அடிக்கடி ஓர் இருவழிச் சந்திபோன்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டு, சத்தியத்தை விட்டுக்கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம். இவ்வகையான அச்சுறுத்தல்களை நாம் எவ்வாறு தாங்குவது? தேவனை அதிகமாய்ச் சார்ந்திருப்பதன் மூலம் மட்டுமே. நாம் அவருக்கு முன்பாகத் தாழ்மையுடன் இருந்தால், அவர் நமக்கு உதவி செய்யவும், அவருடைய வழியில் நம்மை வழிநடத்தவும் தயாராயிருக்கிறார். நீங்கள் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மையுடன் இருக்கிறீர்களா? அப்பொழுதுதான் வாழ்க்கையில் சரியானதைச் செய்ய அவர் உங்களை வழிநடத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வழிகளில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். சங்கீதம் 25:9 தேவனுடைய உதவியின்றி, இவ்வுலலகில் நாம் வெற்றிகரமாகவும் பரிசுத்தமாகவும் இருக்க முடியாது. இவ்விருண்ட உலகில் வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபை நமக்குத் தேவைப்படுகிறது. கர்ஜிக்கும் சிங்கத்தைப் போல நம் எதிரி வகைதேடிச் சுற்றித் திரிந்து, நம்மை வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறான் என்று வேதம் சொல்கிறது. இவ்வகையான கடினமான சூழ்நிலையில், இவ்வுலகத்தின் அசுத்தத்திலிருந்து விலகியிருக்க, நாம் எப்பொழுதும் கவனமாகவும், தேவ பக்தியுடனும் இருக்க வேண்டும். பல சமயங்களில், நாம் பயணிக்க வேண்டிய பாதையில், சரியானதைத் தீர்மானிப்பதில் குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்கும். நாம் அடிக்கடி ஓர் இருவழிச் சந்திபோன்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டு, சத்தியத்தை விட்டுக்கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம். இவ்வகையான அச்சுறுத்தல்களை நாம் எவ்வாறு தாங்குவது? தேவனை அதிகமாய்ச் சார்ந்திருப்பதன் மூலம் மட்டுமே. நாம் அவருக்கு முன்பாகத் தாழ்மையுடன் இருந்தால், அவர் நமக்கு உதவி செய்யவும், அவருடைய வழியில் நம்மை வழிநடத்தவும் தயாராயிருக்கிறார். நீங்கள் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மையுடன் இருக்கிறீர்களா? அப்பொழுதுதான் வாழ்க்கையில் சரியானதைச் செய்ய அவர் உங்களை வழிநடத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வழிகளில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.