வியாழன், 1 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. சங்கீதம் 121: 6 தேவன் தமது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாய்ச் சூரியனையும் சந்திரனையும் படைத்தார். ஆனால், அவை ஜனங்களால் வணங்கப்படக்கூடாது. அவை வாழ்க்கைச் சுழற்சியில் இன்றியமையாதவை, மேலும் அவற்றை அற்பமாய் எடுத்துக்கொள்ளவும் கூடாது. சூரியன், சூரிய குடும்பத்தின் மையம் மட்டுமல்ல, மனிதர்களைச் சேதப்படுத்தவும் அது வல்லமையுள்ளதாயும் இருக்கிறது. அப்படியானால், நம் சிருஷ்டிகர் எவ்வளவு வல்லமையானவராய் இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். எனவே, படைப்பிற்கு அஞ்சாதீர்கள்; அதற்குப் பதிலாய், படைப்பாளருக்குக் கீழ்ப்படியுங்கள். இயற்கை அனைத்தின்மீதும் அதிகாரம் உடைய அவர், உங்களைச் சேதங்களினின்று காப்பாற்றுவார். தேவனுடைய பாதுகாப்பில் இருக்க உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். அவர் உங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் சர்வ வல்லமையுள்ளவரும், சூரியன், சந்திரன் உட்பட முழு உலகத்தையும் சிருஷ்டித்தவருமானவர். தீங்கினின்றும் ஆபத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றும். ஆமென்.
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உங்களைச்...
“சங்கீதம் 121: 6 தேவன் தமது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாய்ச் சூரியனையும் சந்திரனையும் படைத்தார். ஆனால், அவை ஜனங்களால் வணங்கப்படக்கூடாது. அவை வாழ்க்கைச் சுழற்சியில் இன்றியமையாதவை, மேலும் அவற்றை அற்பமாய் எடுத்துக்கொள்ளவும் கூடாது. சூரியன், சூரிய குடும்பத்தின் மையம் மட்டுமல்ல, மனிதர்களைச் சேதப்படுத்தவும் அது வல்லமையுள்ளதாயும் இருக்கிறது. அப்படியானால், நம் சிருஷ்டிகர் எவ்வளவு வல்லமையானவராய் இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். எனவே, படைப்பிற்கு அஞ்சாதீர்கள்; அதற்குப் பதிலாய், படைப்பாளருக்குக் கீழ்ப்படியுங்கள். இயற்கை அனைத்தின்மீதும் அதிகாரம் உடைய அவர், உங்களைச் சேதங்களினின்று காப்பாற்றுவார். தேவனுடைய பாதுகாப்பில் இருக்க உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். அவர் உங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் சர்வ வல்லமையுள்ளவரும், சூரியன், சந்திரன் உட்பட முழு உலகத்தையும் சிருஷ்டித்தவருமானவர். தீங்கினின்றும் ஆபத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

