வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும். சகரியா 4:6 உங்களின் பலம், செல்வாக்கு அனைத்தையும் செயல்படுத்தின போதிலும் தொடர்ச்சியான தோல்விகளால் நீங்கள் விரக்தியடைகிறீர்களா? அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? மனம் தளராதீர்கள். இயேசு கிறிஸ்து ஒரு தீர்வைத் தருகிறார். உங்கள் திறமைகள், கல்வி, செல்வாக்கு மற்றும் பொருள் உடைமைகளை மட்டுமே நம்பியிருப்பது தோல்விக்கு வழிவகுக்கும். நீங்கள் ‘தேவனுடைய கைவேலை’ என்றும் ‘உன்னதப் படைப்பு’ என்றும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஜெயத்திற்கு பரிசுத்த ஆவியின்மூலம் முழுமையாய்ச் சகாயம்பண்ணி உதவுவதாய் அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். உங்கள் வழிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைத்து, உங்கள் தீர்மானங்கள், செயல்கள் எல்லாவற்றிலும் அவரைச் சார்ந்திருங்கள். அவருடைய வழிகாட்டுதலால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வேலையில் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைத் தாரும். ஆமென்.
தேவனுடைய ஆவியினால் மட்டுமே நீங்கள் ஜெயங்கொள்ள முடியும்.
“வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும். சகரியா 4:6 உங்களின் பலம், செல்வாக்கு அனைத்தையும் செயல்படுத்தின போதிலும் தொடர்ச்சியான தோல்விகளால் நீங்கள் விரக்தியடைகிறீர்களா? அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? மனம் தளராதீர்கள். இயேசு கிறிஸ்து ஒரு தீர்வைத் தருகிறார். உங்கள் திறமைகள், கல்வி, செல்வாக்கு மற்றும் பொருள் உடைமைகளை மட்டுமே நம்பியிருப்பது தோல்விக்கு வழிவகுக்கும். நீங்கள் 'தேவனுடைய கைவேலை' என்றும் 'உன்னதப் படைப்பு' என்றும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஜெயத்திற்கு பரிசுத்த ஆவியின்மூலம் முழுமையாய்ச் சகாயம்பண்ணி உதவுவதாய் அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். உங்கள் வழிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைத்து, உங்கள் தீர்மானங்கள், செயல்கள் எல்லாவற்றிலும் அவரைச் சார்ந்திருங்கள். அவருடைய வழிகாட்டுதலால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வேலையில் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

