← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்புங்கள்
படத்தைப் பதிவிறக்கு

தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்புங்கள்

“்கிறேன்.சங்கீதம் 52:8 தேவனுடைய கிருபை நித்தியமானது. நம்முடைய குறைபாடுகள் மற்றும் தோல்விகளின் மத்தியிலும் அவர் நம்மேல் வைத்துள்ள அன்பு உறுதியானதும் அசைக்க முடியாததுமாய் இருக்கிறது. அவருடைய அன்பின் ஆழத்தை நம்மால் முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடியாது.நீங்கள் வாழ்க்கையில் போராடுகிறீர்களா?பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்காய் நீங்கள் எடுத்த தீர்மானங்களையும் உறுதிமொழிகளையும் காப்பாற்றுவது உங்களுக்கு கடினமாயிருக்கிறதா? அவருடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். அவருடைய நிலையான அன்பை நம்புங்கள். அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் சார்ந்துகொள்ளுங்கள். விட்டுவிடாதீர்கள். தேவனுடைய வீட்டில் ஓர் பச்சையான ஒலிவ மரத்தைப் போல் நீங்கள் நிச்சயமாய்ச் செழிப்பீர்கள். அவர் உங்கள் அவல நிலைகளை அற்புதமாய் மாற்றுவார். அவர் உங்கள் வறண்டுபோன வாழ்க்கையை அவரது பிரன்னத்தினாலும் மகிமையினாலும் நிரப்பப்பட்ட ஓர் புதியதும், துடிப்புமான வாழ்க்கையாய் மாற்றுவார். அவரை நம்பிக்கொண்டே இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் உமது இரக்கத்தை நம்புவதற்கு எனக்கு கிருபை தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.சங்கீதம் 52:8 தேவனுடைய கிருபை நித்தியமானது. நம்முடைய குறைபாடுகள் மற்றும் தோல்விகளின் மத்தியிலும் அவர் நம்மேல் வைத்துள்ள அன்பு உறுதியானதும் அசைக்க முடியாததுமாய் இருக்கிறது. அவருடைய அன்பின் ஆழத்தை நம்மால் முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடியாது.நீங்கள் வாழ்க்கையில் போராடுகிறீர்களா?பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்காய் நீங்கள் எடுத்த தீர்மானங்களையும் உறுதிமொழிகளையும் காப்பாற்றுவது உங்களுக்கு கடினமாயிருக்கிறதா? அவருடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். அவருடைய நிலையான அன்பை நம்புங்கள். அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் சார்ந்துகொள்ளுங்கள். விட்டுவிடாதீர்கள். தேவனுடைய வீட்டில் ஓர் பச்சையான ஒலிவ மரத்தைப் போல் நீங்கள் நிச்சயமாய்ச் செழிப்பீர்கள். அவர் உங்கள் அவல நிலைகளை அற்புதமாய் மாற்றுவார். அவர் உங்கள் வறண்டுபோன வாழ்க்கையை அவரது பிரன்னத்தினாலும் மகிமையினாலும் நிரப்பப்பட்ட ஓர் புதியதும், துடிப்புமான வாழ்க்கையாய் மாற்றுவார். அவரை நம்பிக்கொண்டே இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் உமது இரக்கத்தை நம்புவதற்கு எனக்கு கிருபை தாரும். ஆமென்.