சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7a இன்றைய வேகமானதும் போட்டி நிறைந்ததுமான உலகில், ஒவ்வொரு நாளும் வேலைப் பொறுப்புகள், குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பேணுதல் ஆகியவற்றில் ஒரு கடினமான போராட்டம் இருக்கலாம். இந்தத் தொடர் மனஅழுத்தம், நமது ஆற்றலை உறிஞ்சிவிட்டுப் பலவீனமும் சோர்வுமுடையவராய் நம்மை உணரச் செய்யலாம். இருப்பினும், தேவனுடைய வார்த்தையில் ஆறுதல் காண்பதே மிகத் தேவையான புத்துணர்வை அளிக்கும். ஆனால், நம் வேகமான வாழ்க்கையின் மத்தியில், புத்துணர்ச்சியையும் புதிய வல்லமையையும் பெற தேவனுடன் அமைதியான நேரத்தைச் செலவிடுவதை நாம் அடிக்கடிப் புறக்கணிக்கிறோம். தேவனுடைய வார்த்தையைப் படிப்பதிலும் தியானிப்பதிலும் ஈடுபடுவதை விட, அன்றன்றைக்குள்ள மற்ற வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இந்த புறக்கணிப்பு ஆவிக்குரிய வறட்சிக்கு வழிவகுக்கும். எனவே, நமது அன்றாட வாழ்வில் தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் முன்னுரிமை கொடுப்பது அவசியம். அவருடைய எழுதப்பட்ட வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், நாம் ஒரு மறுமலர்ச்சியை அனுபவித்துப் புத்துணர்ச்சியைக் காணலாம். எனவே, தேவனுடைய வார்த்தையைத் தினமும் வாசிப்பதை நீங்கள் பழக்கமாக்கிக் கொள்வீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியையும், உடலையும் புத்துணர்ச்சியூட்டவும் உற்சாகப்படுத்தவும் உம்முடன் நேரத்தைச் செலவிடுவதற்கு முன்னுரிமை அளிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
கர்த்தருடைய வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது
“சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7a இன்றைய வேகமானதும் போட்டி நிறைந்ததுமான உலகில், ஒவ்வொரு நாளும் வேலைப் பொறுப்புகள், குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பேணுதல் ஆகியவற்றில் ஒரு கடினமான போராட்டம் இருக்கலாம். இந்தத் தொடர் மனஅழுத்தம், நமது ஆற்றலை உறிஞ்சிவிட்டுப் பலவீனமும் சோர்வுமுடையவராய் நம்மை உணரச் செய்யலாம். இருப்பினும், தேவனுடைய வார்த்தையில் ஆறுதல் காண்பதே மிகத் தேவையான புத்துணர்வை அளிக்கும். ஆனால், நம் வேகமான வாழ்க்கையின் மத்தியில், புத்துணர்ச்சியையும் புதிய வல்லமையையும் பெற தேவனுடன் அமைதியான நேரத்தைச் செலவிடுவதை நாம் அடிக்கடிப் புறக்கணிக்கிறோம். தேவனுடைய வார்த்தையைப் படிப்பதிலும் தியானிப்பதிலும் ஈடுபடுவதை விட, அன்றன்றைக்குள்ள மற்ற வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இந்த புறக்கணிப்பு ஆவிக்குரிய வறட்சிக்கு வழிவகுக்கும். எனவே, நமது அன்றாட வாழ்வில் தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் முன்னுரிமை கொடுப்பது அவசியம். அவருடைய எழுதப்பட்ட வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், நாம் ஒரு மறுமலர்ச்சியை அனுபவித்துப் புத்துணர்ச்சியைக் காணலாம். எனவே, தேவனுடைய வார்த்தையைத் தினமும் வாசிப்பதை நீங்கள் பழக்கமாக்கிக் கொள்வீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியையும், உடலையும் புத்துணர்ச்சியூட்டவும் உற்சாகப்படுத்தவும் உம்முடன் நேரத்தைச் செலவிடுவதற்கு முன்னுரிமை அளிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

