புதன், 3 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. சங்கீதம் 119:6 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் உரையாடல்களில், வசனங்களை மேற்கோள் காட்டுவதற்கோ அல்லது பரிசுத்த வேதாகமத்தைப் பொதுவிடங்களில் எடுத்துச் செல்வதற்கோ நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? “நீங்கள் வேதத்தைச் சுமந்தால், வேதம் உங்களை சுமக்கும்” என்ற புகழ்பெற்ற கூற்றை நினைவில் கொள்ளுங்கள். எனது சொந்த வாழ்க்கையில் இந்த அறிக்கையின் உண்மைக்கு என்னால் சான்றளிக்க முடியும். நான் சிறுவயதிலிருந்தே கடுமையான வேதாகமக் கொள்கைகளின்படி வளர்க்கப்பட்டேன். தேவனுடைய வார்த்தையை என் கையிலும் இருதயத்திலும் சுமந்து வளர்ந்தேன். இதன் விளைவாக, தேவன் என்னை ஆசீர்வதித்து, அவருடைய அன்பையும் கிருபையையும் பற்றிப் பேச உலகின் பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார். இன்றும், நான் என் வாழ்க்கையில் தேவனுடைய இரக்கத்திற்கும், தயவுக்கும் சாட்சியாயிருக்கிறேன். தேவனுடைய வார்த்தையைக் கண்ணோக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். ஏனென்றால் அவர் உங்களை மற்றவர்கள் முன் வெட்கப்பட அனுமதிக்கமாட்டார். அவருடைய கட்டளைகளை உங்கள் இருதயத்தில் வைத்து, தொடர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாய் முடிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையில் நம்பிக்கையுடன் இருக்கவும், வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமது கற்பனைகளைப் பின்பற்றவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தேவனுடைய கற்பனைகளை கண்ணோக்க வெட்கப்பட வேண்டாம்.
“புதன், 3 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. சங்கீதம் 119:6 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் உரையாடல்களில், வசனங்களை மேற்கோள் காட்டுவதற்கோ அல்லது பரிசுத்த வேதாகமத்தைப் பொதுவிடங்களில் எடுத்துச் செல்வதற்கோ நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? "நீங்கள் வேதத்தைச் சுமந்தால், வேதம் உங்களை சுமக்கும்" என்ற புகழ்பெற்ற கூற்றை நினைவில் கொள்ளுங்கள். எனது சொந்த வாழ்க்கையில் இந்த அறிக்கையின் உண்மைக்கு என்னால் சான்றளிக்க முடியும். நான் சிறுவயதிலிருந்தே கடுமையான வேதாகமக் கொள்கைகளின்படி வளர்க்கப்பட்டேன். தேவனுடைய வார்த்தையை என் கையிலும் இருதயத்திலும் சுமந்து வளர்ந்தேன். இதன் விளைவாக, தேவன் என்னை ஆசீர்வதித்து, அவருடைய அன்பையும் கிருபையையும் பற்றிப் பேச உலகின் பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார். இன்றும், நான் என் வாழ்க்கையில் தேவனுடைய இரக்கத்திற்கும், தயவுக்கும் சாட்சியாயிருக்கிறேன். தேவனுடைய வார்த்தையைக் கண்ணோக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். ஏனென்றால் அவர் உங்களை மற்றவர்கள் முன் வெட்கப்பட அனுமதிக்கமாட்டார். அவருடைய கட்டளைகளை உங்கள் இருதயத்தில் வைத்து, தொடர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாய் முடிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையில் நம்பிக்கையுடன் இருக்கவும், வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமது கற்பனைகளைப் பின்பற்றவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

