வியாழன், 18 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். யோவான் 15:4 தேவ பிரசன்னத்தைப் பற்றி நீங்கள் நிச்சயமற்றவராய் இருக்கிறீர்களா? அவருடைய பிரசன்னத்தை உணரமுடியாமல் தவிக்கிறீர்களா? இயேசு உங்களை ஒருபொழுதும் கைவிட மாட்டார் என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். நீங்கள் அவருடனான உங்கள் உறவை முறித்துக் கொள்ளாதவரை அவர் உங்களைவிட்டு விலக மாட்டார். அவர் தம் வாக்குத்தத்தங்களைக் காப்பாற்றும் இரக்கமுள்ள தேவன். நீங்கள் அவருடன் எவ்வளவு நெருக்கமாய் இணைந்திருக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள். நீங்கள் அவரை அணுகும்போதோ அல்லது அவரை அழைக்கும்போதோ அவர் நிச்சயமாய்ப் பதிலளிப்பார். அவரது நேரத்தையும் நட்பையும் கனம் பண்ணுங்கள். அவருடனான உங்கள் உறவை வளர்ப்பதற்கு உண்மையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவருடைய சிநேகத்தையும் பராமரிப்பையும் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் எப்பொழுதும் ஐக்கியமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவனில் நிலைத்திருங்கள், அவரும் உங்களில் நிலைத்திருப்பார்.
“வியாழன், 18 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். யோவான் 15:4 தேவ பிரசன்னத்தைப் பற்றி நீங்கள் நிச்சயமற்றவராய் இருக்கிறீர்களா? அவருடைய பிரசன்னத்தை உணரமுடியாமல் தவிக்கிறீர்களா? இயேசு உங்களை ஒருபொழுதும் கைவிட மாட்டார் என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். நீங்கள் அவருடனான உங்கள் உறவை முறித்துக் கொள்ளாதவரை அவர் உங்களைவிட்டு விலக மாட்டார். அவர் தம் வாக்குத்தத்தங்களைக் காப்பாற்றும் இரக்கமுள்ள தேவன். நீங்கள் அவருடன் எவ்வளவு நெருக்கமாய் இணைந்திருக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள். நீங்கள் அவரை அணுகும்போதோ அல்லது அவரை அழைக்கும்போதோ அவர் நிச்சயமாய்ப் பதிலளிப்பார். அவரது நேரத்தையும் நட்பையும் கனம் பண்ணுங்கள். அவருடனான உங்கள் உறவை வளர்ப்பதற்கு உண்மையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவருடைய சிநேகத்தையும் பராமரிப்பையும் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் எப்பொழுதும் ஐக்கியமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

