← செய்திகளுக்குத் திரும்பு
ஜீவ ஒளியில் நடவுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

ஜீவ ஒளியில் நடவுங்கள்

“செவ்வாய், 10 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் என்னை மரணத்தினின்று காத்தீர். பிறரிடம் நான் தோல்வியடையாதவாறு செய்தீர். எனவே நான் தேவனை ஒளியில் தொழுதுகொள்வேன்.சங்கீதம் 56:13 (TERV) உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணி அவற்றை ஒவ்வொன்றாய்ப் பெயரிடுங்கள். தேவன் உங்களை எத்தனை முறை ஆபத்தினின்று மீட்டெடுத்து, தடுமாறாமலோ விழாமலோ காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றும் தேவனிடம் நெருங்கி வருவதற்கும், அவருடன் மீண்டும் ஐக்கியம் கொள்வதற்கும், கிறிஸ்துவுடனான உங்கள் நடையை ஆழமாக்குவதற்கும் ஓர் வாய்ப்பாகும். அவரே பாவம் மற்றும் மரணத்தின் இருளிலிருந்து ஜனங்களை விடுவிக்கக்கூடிய நித்திய ஒளியாவார். கட்டுண்டவர்களுக்கும் அடிமையானவர்களுக்கும் விடுதலையைக் கொண்டுவரவும் , நம்பிக்கையற்றோர்க்கு நம்பிக்கை அளித்து, ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்ந்து, உள் காயங்களைக் குணப்படுத்தவும் இவ்வெளிச்சத்தில் நடக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள், முன்னொருமுறை எதிர்கொண்ட அதே சூழ்நிலையிலுள்ள மற்றோர்க்கு உதவும்படிக்கே இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பிரதிநிதியாய் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர் உங்களை ஆழமாய் நேசிக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே,ஜீவ ஒளியில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் என்னை மரணத்தினின்று காத்தீர். பிறரிடம் நான் தோல்வியடையாதவாறு செய்தீர். எனவே நான் தேவனை ஒளியில் தொழுதுகொள்வேன்.சங்கீதம் 56:13 (TERV) உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணி அவற்றை ஒவ்வொன்றாய்ப் பெயரிடுங்கள். தேவன் உங்களை எத்தனை முறை ஆபத்தினின்று மீட்டெடுத்து, தடுமாறாமலோ விழாமலோ காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றும் தேவனிடம் நெருங்கி வருவதற்கும், அவருடன் மீண்டும் ஐக்கியம் கொள்வதற்கும், கிறிஸ்துவுடனான உங்கள் நடையை ஆழமாக்குவதற்கும் ஓர் வாய்ப்பாகும். அவரே பாவம் மற்றும் மரணத்தின் இருளிலிருந்து ஜனங்களை விடுவிக்கக்கூடிய நித்திய ஒளியாவார். கட்டுண்டவர்களுக்கும் அடிமையானவர்களுக்கும் விடுதலையைக் கொண்டுவரவும் , நம்பிக்கையற்றோர்க்கு நம்பிக்கை அளித்து, ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்ந்து, உள் காயங்களைக் குணப்படுத்தவும் இவ்வெளிச்சத்தில் நடக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள், முன்னொருமுறை எதிர்கொண்ட அதே சூழ்நிலையிலுள்ள மற்றோர்க்கு உதவும்படிக்கே இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பிரதிநிதியாய் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர் உங்களை ஆழமாய் நேசிக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே,ஜீவ ஒளியில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.