திங்கட்கிழமை, 17 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்.மாற்கு 10:27 அண்டசராசரத்தையும் சிருஷ்டித்தவராகிய நம்முடைய தேவன், சர்வ வல்லமையுள்ளவராகவும், நமது இன்னல்களில் அணுகூலமான துணையாகவும் இருக்கிறார். அவர் உங்களைத் தமது சாயலில் சிருஷ்டித்தார். உங்கள் வாழ்க்கைக்கென்று மேலான திட்டங்களை வைத்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலைகள், நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் அறிகுறிகளைக் காட்டாமால் மிகவும் இருள் சூழ்ந்ததாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கலாம். என்றாலும், நமது (மனித) வரம்புகளை மறந்துவிடாதீர்கள். உங்கள் வரையறுக்கப்பட்ட திறன்களைக் கொண்டு தேவனை மதிப்பிட முயற்சிக்காதீர்கள். இவ்வண்டசராசரத்தின் தேவன், உங்கள் அன்புத் தகப்பன் என்று அழைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் அவரை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கடினப் பாதைகள், தோல்விகள் அல்லது தாழ்வுற்ற நேரங்களைச் சந்திக்கும் போதும், உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் அவரை நம்புங்கள். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் உங்கள் சூழ்நிலையை ஒரு நொடியில் மாற்றுவார். அவரை நம்பி அவருடைய அடிச்சுவடுகளில் நடவுங்கள். நீங்கள் ஒருபொழுதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையை நம்பி உமது அடிச்சுவடுகளில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவனால் எல்லாம் கூடும்.
“திங்கட்கிழமை, 17 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்.மாற்கு 10:27 அண்டசராசரத்தையும் சிருஷ்டித்தவராகிய நம்முடைய தேவன், சர்வ வல்லமையுள்ளவராகவும், நமது இன்னல்களில் அணுகூலமான துணையாகவும் இருக்கிறார். அவர் உங்களைத் தமது சாயலில் சிருஷ்டித்தார். உங்கள் வாழ்க்கைக்கென்று மேலான திட்டங்களை வைத்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலைகள், நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் அறிகுறிகளைக் காட்டாமால் மிகவும் இருள் சூழ்ந்ததாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கலாம். என்றாலும், நமது (மனித) வரம்புகளை மறந்துவிடாதீர்கள். உங்கள் வரையறுக்கப்பட்ட திறன்களைக் கொண்டு தேவனை மதிப்பிட முயற்சிக்காதீர்கள். இவ்வண்டசராசரத்தின் தேவன், உங்கள் அன்புத் தகப்பன் என்று அழைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் அவரை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கடினப் பாதைகள், தோல்விகள் அல்லது தாழ்வுற்ற நேரங்களைச் சந்திக்கும் போதும், உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் அவரை நம்புங்கள். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் உங்கள் சூழ்நிலையை ஒரு நொடியில் மாற்றுவார். அவரை நம்பி அவருடைய அடிச்சுவடுகளில் நடவுங்கள். நீங்கள் ஒருபொழுதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையை நம்பி உமது அடிச்சுவடுகளில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

