செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதிமொழிகள் 10:22 இவ்வுலகில் செழித்திருக்க நம் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தேவை. நமக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் தேவனே ஆதாரமாயிருக்கிறார். அவர் தருகிற ஆசீர்வாதத்தைத் தேடுவது மட்டுமே விவேகமானது. ஆனால், இன்றைய உலகில், ஆசீர்வதிக்கப்படுவதற்குப் பல்வேறு உத்திகளை முயற்சிக்கும் ஜனங்கள் வெவ்வேறு திசைகளில் ஓடுவதை நாம் காண்கிறோம். நம் அன்புத் தகப்பனாகிய தேவன், நம்மைத் திரளாய் ஆசீர்வதிக்கவும், மற்றவர்களுக்கு நம்மை ஆசீர்வாதமாய் வைக்கவும் விரும்புகிறார். அவருடைய ஆலோசனைகளை நாம் பின்பற்றும்போது, நாம் ஆசீர்வதிக்கப்பட முடியும். நீங்கள் உலக வழிகளில் ஆசீர்வாதங்களைத் தேடுகிறீர்களா? அப்படியானால், அதை விட்டுவிட்டு இயேசுவிடம் திரும்பி வாருங்கள். அவருடைய முகத்தைத் தேடி, அவருடைய வழிகளைப் பின்பற்றுங்கள். அவருடைய ஆசீர்வாதங்கள் உங்களை எல்லாப் பகுதிகளிலும் ஐசுவரியவான்களாய் மாற்றும். அவர் அதனோடே வேதனையைக் கூட்ட மாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழத் தேவையான காரியங்களைத் தேடி கண்டுபிடிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்.
“அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதிமொழிகள் 10:22 இவ்வுலகில் செழித்திருக்க நம் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தேவை. நமக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் தேவனே ஆதாரமாயிருக்கிறார். அவர் தருகிற ஆசீர்வாதத்தைத் தேடுவது மட்டுமே விவேகமானது. ஆனால், இன்றைய உலகில், ஆசீர்வதிக்கப்படுவதற்குப் பல்வேறு உத்திகளை முயற்சிக்கும் ஜனங்கள் வெவ்வேறு திசைகளில் ஓடுவதை நாம் காண்கிறோம். நம் அன்புத் தகப்பனாகிய தேவன், நம்மைத் திரளாய் ஆசீர்வதிக்கவும், மற்றவர்களுக்கு நம்மை ஆசீர்வாதமாய் வைக்கவும் விரும்புகிறார். அவருடைய ஆலோசனைகளை நாம் பின்பற்றும்போது, நாம் ஆசீர்வதிக்கப்பட முடியும். நீங்கள் உலக வழிகளில் ஆசீர்வாதங்களைத் தேடுகிறீர்களா? அப்படியானால், அதை விட்டுவிட்டு இயேசுவிடம் திரும்பி வாருங்கள். அவருடைய முகத்தைத் தேடி, அவருடைய வழிகளைப் பின்பற்றுங்கள். அவருடைய ஆசீர்வாதங்கள் உங்களை எல்லாப் பகுதிகளிலும் ஐசுவரியவான்களாய் மாற்றும். அவர் அதனோடே வேதனையைக் கூட்ட மாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழத் தேவையான காரியங்களைத் தேடி கண்டுபிடிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

