வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 1 இராஜாக்கள் 3:12 - தேவன் உங்களை நேசித்து உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.- மறுபுறம், பிசாசு உங்களை ஏமாற்றவும் தேவ திட்டத்திலிருந்து திசைதிருப்பவும் முயற்சிக்கிறான்.- நீங்கள் விழிப்புடன் இருக்கவும், எதிரியின் தந்திரங்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றைத் தவிர்க்கவும் கர்த்தர் விரும்புகிறார். - ஒரு அன்பான தகப்பனாய், நீங்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம் தேவன் உங்களைத் திருத்துகிறார்.- அவர் தமது ஞானத்தின் ஆவியை உங்கள் மேல் ஊற்றவும் அவருடைய வார்த்தைகளின் வெளிப்பாடுகளைத் தரவும் ஆயத்தமாய் இருக்கிறார். இதன் மூலம், எதிரியின் தீய திட்டங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். - தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி, பரிசுத்த ஆவியின் வரங்களால் நிரப்பப்பட்டு, வெற்றிகரமான வாழ்க்கை வாழுங்கள்.- நீங்கள் தேவனிடமிருந்து விலகி இருப்பீர்களென்றால், இப்பொழுதே நீங்கள் உணர்வடைந்து உண்மைக்குத் திரும்புவதற்கான நேரம் இது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து உம்மோடுள்ள என் உறவை மீண்டும் நிலைநிறுத்தி, ஞானமும் விவேகமுமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் நன்மை செய்தால் மகிமையும் கனமும் சமாதானமும் தேவனால்...
“வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 1 இராஜாக்கள் 3:12 - தேவன் உங்களை நேசித்து உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.- மறுபுறம், பிசாசு உங்களை ஏமாற்றவும் தேவ திட்டத்திலிருந்து திசைதிருப்பவும் முயற்சிக்கிறான்.- நீங்கள் விழிப்புடன் இருக்கவும், எதிரியின் தந்திரங்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றைத் தவிர்க்கவும் கர்த்தர் விரும்புகிறார். - ஒரு அன்பான தகப்பனாய், நீங்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம் தேவன் உங்களைத் திருத்துகிறார்.- அவர் தமது ஞானத்தின் ஆவியை உங்கள் மேல் ஊற்றவும் அவருடைய வார்த்தைகளின் வெளிப்பாடுகளைத் தரவும் ஆயத்தமாய் இருக்கிறார். இதன் மூலம், எதிரியின் தீய திட்டங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். - தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி, பரிசுத்த ஆவியின் வரங்களால் நிரப்பப்பட்டு, வெற்றிகரமான வாழ்க்கை வாழுங்கள்.- நீங்கள் தேவனிடமிருந்து விலகி இருப்பீர்களென்றால், இப்பொழுதே நீங்கள் உணர்வடைந்து உண்மைக்குத் திரும்புவதற்கான நேரம் இது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து உம்மோடுள்ள என் உறவை மீண்டும் நிலைநிறுத்தி, ஞானமும் விவேகமுமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

