← செய்திகளுக்குத் திரும்பு
பதற்றமடைய வேண்டாம். உங்களைத் தொடும் எவனும் கர்த்தருடைய கண்பணியைத் தொடுகிறான்.
படத்தைப் பதிவிறக்கு

பதற்றமடைய வேண்டாம்.

“திங்கட்கிழமை, 1 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். சகரியா 2:8b அன்பு தேவ பிள்ளையே, இயேசுவைப் பகைக்கிறவர்களால் வரும் தீங்கைக் குறித்து நீங்கள் தொடர்ந்து பயந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்களா? பயப்படாதீர்கள். கிறிஸ்து உங்கள் அடைக்கலமாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்குச் சொந்தமானவராக மீட்டுக்கொண்டார். உங்களைப் பாதுகாப்பதற்காக அவர் எப்பொழுதும் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் கன்மலையும், கோட்டையாகவும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமாய் இருக்கிறார். வாழ்க்கையின் புயல்கள் உங்களைச் சுற்றிச் சீறி வரும்போது ​​அவர் உங்கள் கோட்டையும், அரணுமாக இருப்பார். உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். அவர் உங்களுக்காக யுத்தம் செய்து உங்களைப் பாதுகாக்கிறார். பதற்றமடைய வேண்டாம். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் இரட்சகராகவும் அடைக்கலமாகவும் இருப்பதற்கு நன்றி. நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். சகரியா 2:8b அன்பு தேவ பிள்ளையே, இயேசுவைப் பகைக்கிறவர்களால் வரும் தீங்கைக் குறித்து நீங்கள் தொடர்ந்து பயந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்களா? பயப்படாதீர்கள். கிறிஸ்து உங்கள் அடைக்கலமாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்குச் சொந்தமானவராக மீட்டுக்கொண்டார். உங்களைப் பாதுகாப்பதற்காக அவர் எப்பொழுதும் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் கன்மலையும், கோட்டையாகவும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமாய் இருக்கிறார். வாழ்க்கையின் புயல்கள் உங்களைச் சுற்றிச் சீறி வரும்போது ​​அவர் உங்கள் கோட்டையும், அரணுமாக இருப்பார். உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். அவர் உங்களுக்காக யுத்தம் செய்து உங்களைப் பாதுகாக்கிறார். பதற்றமடைய வேண்டாம். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் இரட்சகராகவும் அடைக்கலமாகவும் இருப்பதற்கு நன்றி. நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.