வெள்ளி, 3 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.சங்கீதம் 23:6 நாம் வாழும் இந்த உலகமும், நாம் சம்பாதிப்பதும், சேமிப்பதும், சாதிப்பதும் மற்றும் அனுபவிப்பதும் ஒருநாள் மறைந்துவிடும். நமது பூமிக்குரிய உறவுகளும் குடும்பமும் கூட முடிவுக்கு வரும். ஆனால், இயேசுவை நம்முடைய மேய்ப்பராகவும், இரட்சகராகவும் கொண்டிருப்பது, அவருடன் நித்தியகாலமாக வாழக்கூடிய பாக்கியத்தை நமக்கு அளிக்கிறது. இதுவே நம்பிக்கைக்குரிய நிரந்தரமான ஆசீர்வாதம். நாம் இயேசுவை நம் வாழ்வில் அழைக்கும் போது, அவர் நமக்குள் வாசம்பண்ணித் தம்முடைய மாறாத அன்பினால் நம்மை நிரப்புகிறார். நாம் தேவனின் ஆலயமாய் மாறுகிறோம். அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம், நாம் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க முடியும், மேலும் தேவன் நம்மில் அகமகிழ்வார். இவ்வுலக வாழ்வில் எவ்வித நன்மையும் நமக்குக் குறையாது, உண்மையில் நன்மையும் கிருபையும் நம்மைப் பின்தொடரும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் நெருக்கமாய் இருக்கவும், என் வாழ்நாள் முழுவதும் உமது நன்மையையும் கிருபையையும் அனுபவிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நன்மையும் கிருபையும் உங்களைப் பின்தொடரும்.
“வெள்ளி, 3 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.சங்கீதம் 23:6 நாம் வாழும் இந்த உலகமும், நாம் சம்பாதிப்பதும், சேமிப்பதும், சாதிப்பதும் மற்றும் அனுபவிப்பதும் ஒருநாள் மறைந்துவிடும். நமது பூமிக்குரிய உறவுகளும் குடும்பமும் கூட முடிவுக்கு வரும். ஆனால், இயேசுவை நம்முடைய மேய்ப்பராகவும், இரட்சகராகவும் கொண்டிருப்பது, அவருடன் நித்தியகாலமாக வாழக்கூடிய பாக்கியத்தை நமக்கு அளிக்கிறது. இதுவே நம்பிக்கைக்குரிய நிரந்தரமான ஆசீர்வாதம். நாம் இயேசுவை நம் வாழ்வில் அழைக்கும் போது, அவர் நமக்குள் வாசம்பண்ணித் தம்முடைய மாறாத அன்பினால் நம்மை நிரப்புகிறார். நாம் தேவனின் ஆலயமாய் மாறுகிறோம். அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம், நாம் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க முடியும், மேலும் தேவன் நம்மில் அகமகிழ்வார். இவ்வுலக வாழ்வில் எவ்வித நன்மையும் நமக்குக் குறையாது, உண்மையில் நன்மையும் கிருபையும் நம்மைப் பின்தொடரும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் நெருக்கமாய் இருக்கவும், என் வாழ்நாள் முழுவதும் உமது நன்மையையும் கிருபையையும் அனுபவிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

