புதன்கிழமை, 2 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். நீதிமொழிகள் 29:18 வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு நமது எதிர்காலம் பற்றிய தெளிவான பார்வை இருப்பது முக்கியம். ஒரு நல்ல தொலைநோக்குப் பார்வை கொண்டவர் சிறந்த தலைவராய் மாற முடியும். முக்கியமான திட்டங்களை நிறைவேற்றிய தரிசனமுள்ள தலைவர்களின் உதாரணங்களை வேதம் நமக்குத் தருகிறது. உதாரணமாய், யோசேப்பு ஓர் சிறந்த தரிசனமுள்ளவராய் இருந்தார். அவரை வேறுபடுத்திக் காட்டத்தக்கதாய்க் கனவுகளை விளக்கும் திறன் அவருக்கு இருந்தது. எகிப்தின் மீது அவருக்கு ஆட்சி கொடுக்கப்பட்டபோது, அவர் எதைச் சாதிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான பார்வை அவருக்கு இருந்தது. இந்தத் தரிசனத்தைப் பின்பற்றியதன் மூலம், அவர் உலகின் தலைச்சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரானார். 1. உங்கள் வாழ்க்கைக்கான திட்டம் உங்களிடம் உள்ளதா?2. உங்களை ஒரு தரிசனமுள்ள தலைவராய்க் கருதுகிறீர்களா? இல்லையென்றால், அவருடைய நோக்கத்துடன் ஒத்துப்போகும் பெரிய திட்டங்களைக் கற்பனை செய்து நோக்கும் திறனுக்காக நீங்கள் தேவனிடம் ஜெபிக்கலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தரிசனமுள்ள தலைவராகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவராகவும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தரிசனம் இல்லாத இடத்தில், ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்
“புதன்கிழமை, 2 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். நீதிமொழிகள் 29:18 வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு நமது எதிர்காலம் பற்றிய தெளிவான பார்வை இருப்பது முக்கியம். ஒரு நல்ல தொலைநோக்குப் பார்வை கொண்டவர் சிறந்த தலைவராய் மாற முடியும். முக்கியமான திட்டங்களை நிறைவேற்றிய தரிசனமுள்ள தலைவர்களின் உதாரணங்களை வேதம் நமக்குத் தருகிறது. உதாரணமாய், யோசேப்பு ஓர் சிறந்த தரிசனமுள்ளவராய் இருந்தார். அவரை வேறுபடுத்திக் காட்டத்தக்கதாய்க் கனவுகளை விளக்கும் திறன் அவருக்கு இருந்தது. எகிப்தின் மீது அவருக்கு ஆட்சி கொடுக்கப்பட்டபோது, அவர் எதைச் சாதிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான பார்வை அவருக்கு இருந்தது. இந்தத் தரிசனத்தைப் பின்பற்றியதன் மூலம், அவர் உலகின் தலைச்சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரானார். 1. உங்கள் வாழ்க்கைக்கான திட்டம் உங்களிடம் உள்ளதா?2. உங்களை ஒரு தரிசனமுள்ள தலைவராய்க் கருதுகிறீர்களா? இல்லையென்றால், அவருடைய நோக்கத்துடன் ஒத்துப்போகும் பெரிய திட்டங்களைக் கற்பனை செய்து நோக்கும் திறனுக்காக நீங்கள் தேவனிடம் ஜெபிக்கலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தரிசனமுள்ள தலைவராகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவராகவும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

