ஞாயிற்றுக்கிழமை, 1 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கொலோசேயர் 3:15 இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு சீஷர்கள் பயந்து, பூட்டிய கதவுகளுக்குள்ளாக, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு இருந்தனர். இருப்பினும், இயேசு அவர்களைக் கைவிடவில்லை. கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், அவர்களின் துக்கத்தின் மத்தியில் இயேசு வந்து அவர்கள் நடுவே நின்றார். “உங்களுக்குச் சமாதானம்!” என்று இயேசு அவர்களை வாழ்த்தினார். அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு அடையாளமான தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் இயேசுவைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்களுடைய இருதயங்கள் பாரமாக இருப்பதை அறிந்த இயேசு, மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக என்றார். பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் மீது ஊதினார். தம்முடைய சாட்சிகளாக இருப்பதற்கும், உலகில் அவருடைய வேலையைச் செய்வதற்கும் அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். # ஆம்! இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் அனைவருக்கும் அவருடைய சமாதானத்தை தருவதாக வாக்களித்துள்ளார்.# உங்கள் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அவருடைய சமாதானத்தால் நீங்கள் இன்னும் நிரப்பப்பட்டு, அவற்றை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். 1. உங்களுக்கு இதுபோன்ற கடந்த கால அனுபவங்கள் உள்ளதா?2. கர்த்தரின் சமாதானம் உங்கள் நம்பிக்கையையும் சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் தன்மையையும் மாற்றியதா?3. எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய சமாதானத்தால் நிரப்பப்பட நீங்கள் என்ன செய்யலாம்? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் இருதயத்தை உமது சமாதானத்தால் நிரப்பி, வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆட்சி செய்யட்டும்.
“ஞாயிற்றுக்கிழமை, 1 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கொலோசேயர் 3:15 இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு சீஷர்கள் பயந்து, பூட்டிய கதவுகளுக்குள்ளாக, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு இருந்தனர். இருப்பினும், இயேசு அவர்களைக் கைவிடவில்லை. கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், அவர்களின் துக்கத்தின் மத்தியில் இயேசு வந்து அவர்கள் நடுவே நின்றார். "உங்களுக்குச் சமாதானம்!" என்று இயேசு அவர்களை வாழ்த்தினார். அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு அடையாளமான தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் இயேசுவைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்களுடைய இருதயங்கள் பாரமாக இருப்பதை அறிந்த இயேசு, மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக என்றார். பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் மீது ஊதினார். தம்முடைய சாட்சிகளாக இருப்பதற்கும், உலகில் அவருடைய வேலையைச் செய்வதற்கும் அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். # ஆம்! இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் அனைவருக்கும் அவருடைய சமாதானத்தை தருவதாக வாக்களித்துள்ளார்.# உங்கள் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அவருடைய சமாதானத்தால் நீங்கள் இன்னும் நிரப்பப்பட்டு, அவற்றை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். 1. உங்களுக்கு இதுபோன்ற கடந்த கால அனுபவங்கள் உள்ளதா?2. கர்த்தரின் சமாதானம் உங்கள் நம்பிக்கையையும் சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் தன்மையையும் மாற்றியதா?3. எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய சமாதானத்தால் நிரப்பப்பட நீங்கள் என்ன செய்யலாம்? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் இருதயத்தை உமது சமாதானத்தால் நிரப்பி, வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

