← செய்திகளுக்குத் திரும்பு
கிறிஸ்துவின் வல்லமை உங்கள் மூலம் கிரியை செய்யும்.
படத்தைப் பதிவிறக்கு

கிறிஸ்துவின் வல்லமை உங்கள் மூலம் கிரியை செய்யும்.

“புதன்கிழமை, 28 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். 2 கொரிந்தியர் 12:9 வாழ்க்கையில் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் அளவுக்கு நீங்கள் தகுதியானவர் இல்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, உடல் ரீதியாய்ப் பலவீனமாகவோ அல்லது தகுதியற்றவராகவோ உணருவது எளிது. என்றாலும்,, உங்களுக்கான தேவ திட்டம் உங்கள் சிந்தனையிலிருந்து வேறுபட்டதென்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர் பொதுவாகவே, தமது வல்லமையை வெளிப்படுத்தவும் தமது மகிமையைக் காண்பிக்கவும் பலவீனமும், அற்பமுமானவரையே தெரிந்தெடுக்கிறார். எனவே நம்பிக்கை இழக்காதீர்கள். இயேசு கிறிஸ்துவில் தைரியமாயிருங்கள். * உங்கள் வழிகளை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவருடைய அற்புதமும் வல்லமையுமான வழிகளை நம்புங்கள்.* மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அவர் உங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் மறுரூபமாக்குவார்.* அவரில் சந்தோஷப்படுங்கள். நீங்கள் அவருக்கு முக்கியமானவர்கள் என்பதையும் விலையேறப்பெற்றவர்கள் என்பதையும் எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையை உலகுக்குக் காண்பிக்க என்னையும் என் வாழ்க்கையையும் பயன்படுத்தும். எனக்கான உம் திட்டத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உமது மகிமைக்காக நீர் என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிவேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 28 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். 2 கொரிந்தியர் 12:9 வாழ்க்கையில் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் அளவுக்கு நீங்கள் தகுதியானவர் இல்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, உடல் ரீதியாய்ப் பலவீனமாகவோ அல்லது தகுதியற்றவராகவோ உணருவது எளிது. என்றாலும்,, உங்களுக்கான தேவ திட்டம் உங்கள் சிந்தனையிலிருந்து வேறுபட்டதென்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர் பொதுவாகவே, தமது வல்லமையை வெளிப்படுத்தவும் தமது மகிமையைக் காண்பிக்கவும் பலவீனமும், அற்பமுமானவரையே தெரிந்தெடுக்கிறார். எனவே நம்பிக்கை இழக்காதீர்கள். இயேசு கிறிஸ்துவில் தைரியமாயிருங்கள். * உங்கள் வழிகளை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவருடைய அற்புதமும் வல்லமையுமான வழிகளை நம்புங்கள்.* மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அவர் உங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் மறுரூபமாக்குவார்.* அவரில் சந்தோஷப்படுங்கள். நீங்கள் அவருக்கு முக்கியமானவர்கள் என்பதையும் விலையேறப்பெற்றவர்கள் என்பதையும் எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையை உலகுக்குக் காண்பிக்க என்னையும் என் வாழ்க்கையையும் பயன்படுத்தும். எனக்கான உம் திட்டத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உமது மகிமைக்காக நீர் என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிவேன். ஆமென்.