செவ்வாய்க்கிழமை, 6 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். ஏசாயா 53:4 * துக்கத்தினால் ஏற்பட்ட வலியையும், வேதனையையும் மேற்கொள்ள நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களா?* உங்கள் இருதயத்தில் வெறுமையாகவும், வாழ்க்கையில் தொலைந்து போனதுபோலவும் உணருகிறீர்களா?* கவலை வேண்டாம்; இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை உண்டு.* உங்களுக்கு உதவவே அவர் எப்பொழுதும் இருக்கிறார்.* நீங்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்துக் கொண்டிருந்தால், அவரிடம் வாருங்கள். அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். * இயேசுதாமே சிலுவையில் சொல்லொண்ணா வேதனையையும் வலியையும் அனுபவித்தார். எனவே, நீங்கள் கடந்து செல்லும் சூழ்நிலைகளை அவர் புரிந்துகொள்கிறார்.* தயங்காமல் அவரிடம் திரும்பி உங்கள் கவலைகள் பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடம் சமர்பித்து விடுங்கள்.* உங்கள் வேதனையினின்று வெளிவர அவர் உங்களுக்கு உதவிச் செய்வார். மட்டுமல்லாது, எல்லாப் புத்திக்கும் மேலான தம்முடைய சமாதானத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார். ஜெபம்: ஆண்டவரே, எங்கள் துக்கங்களையும் பாடுகளையும் சிலுவையில் சுமந்ததற்காக நன்றி. தயவுகூர்ந்து என் துக்கத்தை மேற்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். உமது சமாதானத்தினாலும் ஆறுதலினாலும் என்னை நிரப்பியருளும். ஆமென்.
இயேசு உங்கள் பாடுகளை ஏற்றுக்கொண்டு, உங்கள் துக்கங்களைச் சுமந்தார்.
“செவ்வாய்க்கிழமை, 6 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். ஏசாயா 53:4 * துக்கத்தினால் ஏற்பட்ட வலியையும், வேதனையையும் மேற்கொள்ள நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களா?* உங்கள் இருதயத்தில் வெறுமையாகவும், வாழ்க்கையில் தொலைந்து போனதுபோலவும் உணருகிறீர்களா?* கவலை வேண்டாம்; இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை உண்டு.* உங்களுக்கு உதவவே அவர் எப்பொழுதும் இருக்கிறார்.* நீங்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்துக் கொண்டிருந்தால், அவரிடம் வாருங்கள். அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். * இயேசுதாமே சிலுவையில் சொல்லொண்ணா வேதனையையும் வலியையும் அனுபவித்தார். எனவே, நீங்கள் கடந்து செல்லும் சூழ்நிலைகளை அவர் புரிந்துகொள்கிறார்.* தயங்காமல் அவரிடம் திரும்பி உங்கள் கவலைகள் பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடம் சமர்பித்து விடுங்கள்.* உங்கள் வேதனையினின்று வெளிவர அவர் உங்களுக்கு உதவிச் செய்வார். மட்டுமல்லாது, எல்லாப் புத்திக்கும் மேலான தம்முடைய சமாதானத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார். ஜெபம்: ஆண்டவரே, எங்கள் துக்கங்களையும் பாடுகளையும் சிலுவையில் சுமந்ததற்காக நன்றி. தயவுகூர்ந்து என் துக்கத்தை மேற்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். உமது சமாதானத்தினாலும் ஆறுதலினாலும் என்னை நிரப்பியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

