← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் பிராணனை அழிவுக்குத் தப்புவிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்கள் பிராணனை அழிவுக்குத் தப்புவிப்பார்.

“புதன்கிழமை, 7 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். யோனா 2:6 * கடினமான காலத்தைக் கடந்து செல்வதுபோலவும் குழியில் விழுந்தது போலவும் உணருகிறீர்களா?* நீங்கள் உதவிக்காகக் கதறியும் எந்த ஆதரவும் கிடைக்கவில்லையா?* தேவனுக்குக் கீழ்ப்படியாமை, உங்களை உதவியற்ற ஆபத்தான சூழ்நிலைக்கு ஆளாக்கியதால் நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? * இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ஆம் என்று பதிலளித்திருந்தால், தேவனிடம் திரும்பி உங்கள் வாழ்க்கை முழுவதையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது.* எந்த ஒரு தயக்கமும், பயமும் இல்லாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே அவரிடம் வாருங்கள்.* தேவன் உங்களை ஆழமாய் நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகிலும், சவாலாகத் தோன்றினாலும், எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிவது அவசியம்.* அப்படிச் செய்வதினால், தேவன் உங்கள் வாழ்க்கையில் செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள். அவர் உங்கள் பிராணனை அழிவுக்குத் தப்புவித்து உங்கள் வாழ்வைப் புதுப்பிப்பார். ஜெபம். கர்த்தராகிய இயேசுவே, நான் முழுவதுமாய் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவுகூர்ந்து என்னைக் குழியினின்று மீட்டெடுத்து என் வாழ்வைப் புதுப்பியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 7 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். யோனா 2:6 * கடினமான காலத்தைக் கடந்து செல்வதுபோலவும் குழியில் விழுந்தது போலவும் உணருகிறீர்களா?* நீங்கள் உதவிக்காகக் கதறியும் எந்த ஆதரவும் கிடைக்கவில்லையா?* தேவனுக்குக் கீழ்ப்படியாமை, உங்களை உதவியற்ற ஆபத்தான சூழ்நிலைக்கு ஆளாக்கியதால் நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? * இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ஆம் என்று பதிலளித்திருந்தால், தேவனிடம் திரும்பி உங்கள் வாழ்க்கை முழுவதையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது.* எந்த ஒரு தயக்கமும், பயமும் இல்லாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே அவரிடம் வாருங்கள்.* தேவன் உங்களை ஆழமாய் நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகிலும், சவாலாகத் தோன்றினாலும், எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிவது அவசியம்.* அப்படிச் செய்வதினால், தேவன் உங்கள் வாழ்க்கையில் செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள். அவர் உங்கள் பிராணனை அழிவுக்குத் தப்புவித்து உங்கள் வாழ்வைப் புதுப்பிப்பார். ஜெபம். கர்த்தராகிய இயேசுவே, நான் முழுவதுமாய் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவுகூர்ந்து என்னைக் குழியினின்று மீட்டெடுத்து என் வாழ்வைப் புதுப்பியும். ஆமென்.