திங்கட்கிழமை, 5 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நொண்டியானவனை இரட்சித்து தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன். செப்பனியா 3:19 உங்கள் சகப் பணியாளர்கள், நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து சமூக ரீதியாகப் பாகுபாடு காட்டப்படுவதையும் தனிமைப்படுத்தப்படுவதையும் நீங்கள் உணருகிறீர்களா? அப்படியானால், நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவிடம் திரும்புவதும், அவரிடம் கூக்குரலிடுவதும் உங்கள் மரியாதையை மீட்டெடுப்பதற்கும் உங்களுக்குத் தகுதியான நீதியைப் பெற்றுத் தருவதற்கும் ஒரு தீர்க்கமான படியாயிருக்கும். அவர் புறக்கணிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்கிறார், அவர்கள் அவரை நம்பும்போது அவர்களது எதிர்காலத்தை மீட்டெடுக்கிறார். அன்பான தகப்பனாக இயேசு உங்களைப் பற்றி ஆழமாய் அக்கறை காட்டுகிறார். பிறரை விட உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறார். இயேசு உங்கள் பக்கத்தில் இருந்தால், நீங்கள் இந்தச் சவாலை முறியடித்து, மற்றவர்களால் மிகவும் விரும்பப்படும் ஒருவராக உங்கள் வாழ்க்கையை மாற்றலாம். நாம் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்போது, நம் சத்துருக்கள் கூட நம்முடன் சமாதானமாவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. லௌகீகப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விலகி நின்று தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழத் தீர்மானம் செய்யுங்கள். அப்பொழுது, முன்பு உங்களை இகழ்ந்தோரிடத்திலும் நீங்கள் தயவுபெறும்படி அவர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களில் தங்கியிருக்கும் தேவதயவு மற்றும் மகிமையினிமித்தம் நீங்கள் இனிமேல் தள்ளப்பட்ட மனிதனாய்க் கருதப்படமாட்டீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம் மாறாத அன்பிற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், மேலும் எனது மரியாதையை மீட்டெடுத்து என்னை ஆசீர்வதித்தருளும். உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். உமது வல்லமை என் வாழ்க்கையை மாற்றட்டும். ஆமென்
தேவன் தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்வார்.
“திங்கட்கிழமை, 5 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நொண்டியானவனை இரட்சித்து தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன். செப்பனியா 3:19 உங்கள் சகப் பணியாளர்கள், நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து சமூக ரீதியாகப் பாகுபாடு காட்டப்படுவதையும் தனிமைப்படுத்தப்படுவதையும் நீங்கள் உணருகிறீர்களா? அப்படியானால், நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவிடம் திரும்புவதும், அவரிடம் கூக்குரலிடுவதும் உங்கள் மரியாதையை மீட்டெடுப்பதற்கும் உங்களுக்குத் தகுதியான நீதியைப் பெற்றுத் தருவதற்கும் ஒரு தீர்க்கமான படியாயிருக்கும். அவர் புறக்கணிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்கிறார், அவர்கள் அவரை நம்பும்போது அவர்களது எதிர்காலத்தை மீட்டெடுக்கிறார். அன்பான தகப்பனாக இயேசு உங்களைப் பற்றி ஆழமாய் அக்கறை காட்டுகிறார். பிறரை விட உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறார். இயேசு உங்கள் பக்கத்தில் இருந்தால், நீங்கள் இந்தச் சவாலை முறியடித்து, மற்றவர்களால் மிகவும் விரும்பப்படும் ஒருவராக உங்கள் வாழ்க்கையை மாற்றலாம். நாம் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்போது, நம் சத்துருக்கள் கூட நம்முடன் சமாதானமாவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. லௌகீகப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விலகி நின்று தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழத் தீர்மானம் செய்யுங்கள். அப்பொழுது, முன்பு உங்களை இகழ்ந்தோரிடத்திலும் நீங்கள் தயவுபெறும்படி அவர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களில் தங்கியிருக்கும் தேவதயவு மற்றும் மகிமையினிமித்தம் நீங்கள் இனிமேல் தள்ளப்பட்ட மனிதனாய்க் கருதப்படமாட்டீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம் மாறாத அன்பிற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், மேலும் எனது மரியாதையை மீட்டெடுத்து என்னை ஆசீர்வதித்தருளும். உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். உமது வல்லமை என் வாழ்க்கையை மாற்றட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

