← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்; மங்கியெரியும் திரியை அணைக்க மாட்டார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்; மங்கியெரியும் திரியை...

“திங்கட்கிழமை, 22 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். ஏசாயா 42:3 - முறிக்கப்பட்ட நாணல்போல் நீங்கள் பலவீனப்பட்டு திகைத்து நிற்கிறீர்களா?- உங்கள் ஆவியில் சோர்ந்து, மீள முடியாதபடிக்கு பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?- எளிமையான பணிகளைக் கூடச் செய்ய இயலாமல் நீங்கள் பவவீனமாக உணர்கிறீர்களா?- எதிர்மறையான சத்தங்களாலும் கடுமையான தீர்ப்புகளாலும் நீங்கள் சூழப்பட்டு முற்றிலும் தனிமையாகவும் ஆதரவற்றவராகவும் உணருகிறீர்களா? - இந்தக் கடினமான காலங்களில், விரக்திக்கு இடம் கொடுக்காதீர்கள்.- விடாமுயற்சியுடன் காத்திருங்கள், உங்கள் கதை இன்னும் முடிவடையவில்லை. பெலத்திற்காகவும் இரக்கத்திற்காகவும் இயேசுவை நோக்கிப் பாருங்கள்.- உங்களை உயர்த்தப் போகும் அவரது இரக்கக் குணத்தில் நம்பிக்கை வையுங்கள், ஏனென்றால் அவர் உங்கள் போராட்டங்களைப் புரிந்துகொள்கிறார். - நெரிந்த நாணலை முறிக்காமல் அதை மென்மையாய் மீட்டெடுப்பதாக இயேசு உறுதியளிக்கிறார்.- அவர் இரக்கத்தோடு உங்களுக்காகப் பரிந்துபேசுபவர். நீதிக்காகவும் சமாதானத்திற்க்காகவும் போராடுகிறவர்.- அவர் உங்களைக் கைவிடமாட்டார்; தோற்க விடமாட்டார்.- திடன்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பலவீனத்தில் என் பலமாகவும், குற்றச்சாட்டுகளுக்கு எதிராய் என் பாதுகாவலராகவும் இருந்து என் ஆவியைப் புதுப்பியும். எனக்குத் தீங்கிழைக்க முயல்வோர்க்கு முன்பாக உமது நீதியை வெளிப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். ஏசாயா 42:3 - முறிக்கப்பட்ட நாணல்போல் நீங்கள் பலவீனப்பட்டு திகைத்து நிற்கிறீர்களா?- உங்கள் ஆவியில் சோர்ந்து, மீள முடியாதபடிக்கு பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?- எளிமையான பணிகளைக் கூடச் செய்ய இயலாமல் நீங்கள் பவவீனமாக உணர்கிறீர்களா?- எதிர்மறையான சத்தங்களாலும் கடுமையான தீர்ப்புகளாலும் நீங்கள் சூழப்பட்டு முற்றிலும் தனிமையாகவும் ஆதரவற்றவராகவும் உணருகிறீர்களா? - இந்தக் கடினமான காலங்களில், விரக்திக்கு இடம் கொடுக்காதீர்கள்.- விடாமுயற்சியுடன் காத்திருங்கள், உங்கள் கதை இன்னும் முடிவடையவில்லை. பெலத்திற்காகவும் இரக்கத்திற்காகவும் இயேசுவை நோக்கிப் பாருங்கள்.- உங்களை உயர்த்தப் போகும் அவரது இரக்கக் குணத்தில் நம்பிக்கை வையுங்கள், ஏனென்றால் அவர் உங்கள் போராட்டங்களைப் புரிந்துகொள்கிறார். - நெரிந்த நாணலை முறிக்காமல் அதை மென்மையாய் மீட்டெடுப்பதாக இயேசு உறுதியளிக்கிறார்.- அவர் இரக்கத்தோடு உங்களுக்காகப் பரிந்துபேசுபவர். நீதிக்காகவும் சமாதானத்திற்க்காகவும் போராடுகிறவர்.- அவர் உங்களைக் கைவிடமாட்டார்; தோற்க விடமாட்டார்.- திடன்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பலவீனத்தில் என் பலமாகவும், குற்றச்சாட்டுகளுக்கு எதிராய் என் பாதுகாவலராகவும் இருந்து என் ஆவியைப் புதுப்பியும். எனக்குத் தீங்கிழைக்க முயல்வோர்க்கு முன்பாக உமது நீதியை வெளிப்படுத்தும். ஆமென்.