வியாழன், 22 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.சங்கீதம் 37:25 உங்கள் நலனில் யாரும் அக்கறைகொள்ளாததாலும் உங்களுடன் நட்பாக இல்லாததாலும் நீங்கள் சோகமடைந்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் தேவனுக்கு முன்பாக நேர்மையாய் வாழ்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், அவற்றைத் திருத்தி, நீதியான வாழ்க்கை வாழப் பிரயாசப்படுங்கள். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது நீதியாய் வாழ்வதற்குரிய முதல் படியாகும். நீங்கள் தேவனுடைய பிள்ளையாகும்போது, அவருடைய வழிகளின்படி வாழ, பரிசுத்த ஆவியினால் அவர் உங்களை வழிநடத்துவார். உண்மையான கீழ்ப்படிதலுடன் நீங்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றும்போது, அவர் உங்களை ஆசீர்வதிப்பது மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நீங்கள் பரிசுத்தமும், நீதியுமாய் தொடர்ந்து வாழும்போது, உங்கள் எதிர்காலச் சந்ததியினரைக் கவனித்துக்கொள்வதாய்த் தேவன் வாக்களிக்கிறார். தேவன் உங்கள் பிள்ளைகளை ஒருபொழுதும் கைவிடமாட்டார். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்பதில் உறுதியாயிருங்கள். எனவே, தொடர்ந்து இயேசுவுக்காக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நீதியாய் வாழ எனக்கு உதவிச் செய்யும், இதனால் நான் தொடர்ந்து உமது ஆசீர்வாதங்களைப் பெறவும், என் பிள்ளைகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாய் இருக்கவும் கிருபைச் செய்யும். ஆமென்.
நீங்கள் நீதியான வாழ்க்கை வாழும்போது தேவன் உங்களையும் உங்கள்...
“வியாழன், 22 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.சங்கீதம் 37:25 உங்கள் நலனில் யாரும் அக்கறைகொள்ளாததாலும் உங்களுடன் நட்பாக இல்லாததாலும் நீங்கள் சோகமடைந்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் தேவனுக்கு முன்பாக நேர்மையாய் வாழ்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், அவற்றைத் திருத்தி, நீதியான வாழ்க்கை வாழப் பிரயாசப்படுங்கள். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது நீதியாய் வாழ்வதற்குரிய முதல் படியாகும். நீங்கள் தேவனுடைய பிள்ளையாகும்போது, அவருடைய வழிகளின்படி வாழ, பரிசுத்த ஆவியினால் அவர் உங்களை வழிநடத்துவார். உண்மையான கீழ்ப்படிதலுடன் நீங்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றும்போது, அவர் உங்களை ஆசீர்வதிப்பது மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நீங்கள் பரிசுத்தமும், நீதியுமாய் தொடர்ந்து வாழும்போது, உங்கள் எதிர்காலச் சந்ததியினரைக் கவனித்துக்கொள்வதாய்த் தேவன் வாக்களிக்கிறார். தேவன் உங்கள் பிள்ளைகளை ஒருபொழுதும் கைவிடமாட்டார். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்பதில் உறுதியாயிருங்கள். எனவே, தொடர்ந்து இயேசுவுக்காக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நீதியாய் வாழ எனக்கு உதவிச் செய்யும், இதனால் நான் தொடர்ந்து உமது ஆசீர்வாதங்களைப் பெறவும், என் பிள்ளைகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாய் இருக்கவும் கிருபைச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

