வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன். ஏசாயா 62:8 * உங்கள் வருமானம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாய் இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* உங்கள் வருமானத்தில் ஓர் கணிசமான பகுதி வீண் செலவுகளை நோக்கி செல்கிறதென்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * முதலில், உங்கள் வருமானம் மற்றும் வளங்கள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுங்கள்.* பற்றாக்குறையைப் பற்றி முறுமுறுப்பதற்குப் பதிலாய், இன்று அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் ஏன் அவரைத் துதித்துப் பாடக் கூடாது? * ஞானமுள்ள நிதி மேலாண்மைக்கு அவருடைய வழிகாட்டலையும் கிருபையையும் நாடுங்கள்.* அவரது அறிவுரைகளை மனப்பூர்வமாய்ப் பின்பற்றி வீண் செலவுகளைத் தவிர்த்திடுங்கள்.* உங்கள் வளங்களைத் தேவைப்படுவோருடன் பகிர்ந்துகொண்டு ஏழைகளுக்கு உதவ முயன்றிடுங்கள். * அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் காண்பீர்கள், உங்கள் தேவைகள் சந்திக்கப்படும்.* அவர் உங்கள் சத்துருக்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை கொடுக்க மாட்டார், ஆனால் அவற்றை முழுமையாய் அனுபவிக்க உங்களுக்குக் கிருபை செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வருமானத்தையும் என் செல்வங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதியும். ஆமென்.
தேவன் உங்கள் தானியத்தை மீண்டும் உங்கள் சத்துருக்களுக்கு...
“வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன். ஏசாயா 62:8 * உங்கள் வருமானம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாய் இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* உங்கள் வருமானத்தில் ஓர் கணிசமான பகுதி வீண் செலவுகளை நோக்கி செல்கிறதென்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * முதலில், உங்கள் வருமானம் மற்றும் வளங்கள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுங்கள்.* பற்றாக்குறையைப் பற்றி முறுமுறுப்பதற்குப் பதிலாய், இன்று அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் ஏன் அவரைத் துதித்துப் பாடக் கூடாது? * ஞானமுள்ள நிதி மேலாண்மைக்கு அவருடைய வழிகாட்டலையும் கிருபையையும் நாடுங்கள்.* அவரது அறிவுரைகளை மனப்பூர்வமாய்ப் பின்பற்றி வீண் செலவுகளைத் தவிர்த்திடுங்கள்.* உங்கள் வளங்களைத் தேவைப்படுவோருடன் பகிர்ந்துகொண்டு ஏழைகளுக்கு உதவ முயன்றிடுங்கள். * அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் காண்பீர்கள், உங்கள் தேவைகள் சந்திக்கப்படும்.* அவர் உங்கள் சத்துருக்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை கொடுக்க மாட்டார், ஆனால் அவற்றை முழுமையாய் அனுபவிக்க உங்களுக்குக் கிருபை செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வருமானத்தையும் என் செல்வங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

