← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்காக எதையும் செய்ய முடியும், அவரை எதுவும் தடுக்க முடியாது.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுக்காக எதையும் செய்ய முடியும், அவரை எதுவும் தடுக்க...

“செவ்வாய், 23 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2 - வாழ்க்கையின் சவால்களால் நீங்கள் பதற்றமாகவும், திகைப்புற்றும் இருக்கிறீர்களா?- உங்கள் அன்புக்குரியவர்களின் வெறுமையான வாக்குறுதிகளால் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களா அல்லது உங்களைத் தாழ்த்த முயற்சிப்பவர்களால் மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா? - பொறுங்கள்!- இயேசுவை விசுவாசித்து, உங்கள் கவலைகள் அனைத்தையும் ஜெபத்தில் அவரிடம் தெரிவிக்க நேரமெடுங்கள்.- இயேசு எப்பொழுதும் உங்களுக்காக இருக்கிறார் என்றும் உங்களை ஒருபொழுதும் வெறுக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.- உங்கள் போராட்டங்களை அறிந்திருக்கிற அவர், அவற்றை மேற்கொள்ள உங்களுக்கு உதவ விரும்புகிறார். - உங்கள் போராட்டங்களின் முழுக் கட்டுப்பாட்டையும் அவருக்குக் கொடுங்கள். அவர் உங்களுக்காக யுத்தம்பண்ணட்டும். ஏனென்றால் அவர் சர்வ வல்லவராயிருக்கிறார், அவரால் முடியாதது எதுவுமில்லை.- அவரால் உங்களுக்காக எதையும் செய்ய முடியும். அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது.- அவரை முழு மனதுடன் நம்பி வாழ்வின் சோதனைகளின் மத்தியில் உங்களை வழிநடத்த அவருக்கு இடம் கொடுங்கள்.- உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்து, அவருடைய சமாதானத்தையும், ஆறுதலையும் பெற்றுக்கொள்ளுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வை முழுமையாய் உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்றி, எனக்காக நீர் யுத்தம்பண்ணும். வாழ்க்கையில் என்னை வெற்றி பெறச் செய்யும். உம்முடைய அன்புக்கும் உண்மைக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 23 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2 - வாழ்க்கையின் சவால்களால் நீங்கள் பதற்றமாகவும், திகைப்புற்றும் இருக்கிறீர்களா?- உங்கள் அன்புக்குரியவர்களின் வெறுமையான வாக்குறுதிகளால் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களா அல்லது உங்களைத் தாழ்த்த முயற்சிப்பவர்களால் மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா? - பொறுங்கள்!- இயேசுவை விசுவாசித்து, உங்கள் கவலைகள் அனைத்தையும் ஜெபத்தில் அவரிடம் தெரிவிக்க நேரமெடுங்கள்.- இயேசு எப்பொழுதும் உங்களுக்காக இருக்கிறார் என்றும் உங்களை ஒருபொழுதும் வெறுக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.- உங்கள் போராட்டங்களை அறிந்திருக்கிற அவர், அவற்றை மேற்கொள்ள உங்களுக்கு உதவ விரும்புகிறார். - உங்கள் போராட்டங்களின் முழுக் கட்டுப்பாட்டையும் அவருக்குக் கொடுங்கள். அவர் உங்களுக்காக யுத்தம்பண்ணட்டும். ஏனென்றால் அவர் சர்வ வல்லவராயிருக்கிறார், அவரால் முடியாதது எதுவுமில்லை.- அவரால் உங்களுக்காக எதையும் செய்ய முடியும். அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது.- அவரை முழு மனதுடன் நம்பி வாழ்வின் சோதனைகளின் மத்தியில் உங்களை வழிநடத்த அவருக்கு இடம் கொடுங்கள்.- உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்து, அவருடைய சமாதானத்தையும், ஆறுதலையும் பெற்றுக்கொள்ளுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வை முழுமையாய் உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்றி, எனக்காக நீர் யுத்தம்பண்ணும். வாழ்க்கையில் என்னை வெற்றி பெறச் செய்யும். உம்முடைய அன்புக்கும் உண்மைக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.