← செய்திகளுக்குத் திரும்பு
தினமும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துங்கள்
படத்தைப் பதிவிறக்கு

தினமும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துங்கள்

“வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். எபிரெயர் 3:13 (TERV) நமது அன்றாட வாழ்வில், நம்முடைய சொந்தச் சவால்கள் மற்றும் அலுல்களில் நாம் அடிக்கடி மிகுந்த ஈடுபாடோடு இருக்கிறோம். என்றாலும், நம் கவனத்தை வெளிப்புற பார்வையிலும் செலுத்த வேதம் நம்மை அழைக்கிறது. ஆம்! நாம் ஒருவரையொருவர் ஊக்குவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவவும் தூண்டுவதற்கும் நாம் தீவிரமாய் முயலும்போது, ​​நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மேம்படுத்தும் உதவிப் பாதையில் பங்களிக்கிறோம். மற்றவர்களை ஊக்குவிப்பதில் நீங்கள் எவ்வளவு நல்லவராய் இருக்கிறீர்கள்? இது ஒரு அன்பான வார்த்தையாகவோ, சேவை செய்யும் செயலாகவோ அல்லது நம்மை ஊக்கப்படுத்திய ஒரு வேத வசனத்தைப் பகிர்வது போலவோ எளிமையாயிருக்கலாம். மற்றவர்களை ஊக்குவிப்பதில் நாம் உணர்வுப்பூர்வமாய் முன்னுரிமை அளிக்கும்போது, ​​நாம் தேவனை மகிமைப்படுத்துகிறோம்; ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை நிறைவேற்றுகிறோம். இது நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்க வேண்டிய பொறுப்பாகும்.மனிதர்களின் இருதயங்களில் கர்த்தர் கொடுத்துள்ள நற்செயல்களை அவர்கள் செயல்படுத்துவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என்பதை அறிந்து, அவர்களின் ஆவியை ஊக்குவித்து கட்டியெழுப்ப முயற்சிப்போம். ஜெபம்: பரலோகத் தகப்பனே, என்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளை உணர்ந்து கொள்ள எனக்குக் கிருபை தாரும். எனது வார்த்தைகளும் செயல்களும், ஊக்கத்திற்கும் அன்புக்கும் ஆதாரமாய் இருக்கட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். எபிரெயர் 3:13 (TERV) நமது அன்றாட வாழ்வில், நம்முடைய சொந்தச் சவால்கள் மற்றும் அலுல்களில் நாம் அடிக்கடி மிகுந்த ஈடுபாடோடு இருக்கிறோம். என்றாலும், நம் கவனத்தை வெளிப்புற பார்வையிலும் செலுத்த வேதம் நம்மை அழைக்கிறது. ஆம்! நாம் ஒருவரையொருவர் ஊக்குவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவவும் தூண்டுவதற்கும் நாம் தீவிரமாய் முயலும்போது, ​​நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மேம்படுத்தும் உதவிப் பாதையில் பங்களிக்கிறோம். மற்றவர்களை ஊக்குவிப்பதில் நீங்கள் எவ்வளவு நல்லவராய் இருக்கிறீர்கள்? இது ஒரு அன்பான வார்த்தையாகவோ, சேவை செய்யும் செயலாகவோ அல்லது நம்மை ஊக்கப்படுத்திய ஒரு வேத வசனத்தைப் பகிர்வது போலவோ எளிமையாயிருக்கலாம். மற்றவர்களை ஊக்குவிப்பதில் நாம் உணர்வுப்பூர்வமாய் முன்னுரிமை அளிக்கும்போது, ​​நாம் தேவனை மகிமைப்படுத்துகிறோம்; ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை நிறைவேற்றுகிறோம். இது நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்க வேண்டிய பொறுப்பாகும்.மனிதர்களின் இருதயங்களில் கர்த்தர் கொடுத்துள்ள நற்செயல்களை அவர்கள் செயல்படுத்துவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என்பதை அறிந்து, அவர்களின் ஆவியை ஊக்குவித்து கட்டியெழுப்ப முயற்சிப்போம். ஜெபம்: பரலோகத் தகப்பனே, என்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளை உணர்ந்து கொள்ள எனக்குக் கிருபை தாரும். எனது வார்த்தைகளும் செயல்களும், ஊக்கத்திற்கும் அன்புக்கும் ஆதாரமாய் இருக்கட்டும். ஆமென்.