ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. எபிரேயர் 10:24 (TRV) “ஆதரவான” என்ற சொல்லுக்கு, ஆதரவு கொடுப்பது அல்லது ஆதரவு காட்டுவது என்று பொருள். ஆதரவளிக்கும் நபர்கள் இரக்கமுள்ளவர்களாயும், புரிந்துகொள்ளுகிறவர்களாயும் இருப்பார்கள். தேவையான நேரத்தில் உதவி செய்து ஊக்குவிப்பார்கள். மேலும், நாம் தோல்வியடைந்தாலோ, அல்லது ஏதேனும் தவறுகளைச் செய்தாலோ அவர்கள் நம்மைக் குற்றப்படுத்துவதில்லை. ஆதரவாக இருப்பதற்கு இயேசுவே சிறந்த உதாரணம். மதத் தலைவர்களின் வேலைக்காரருக்கு முன்பாகப் பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிதார். இயேசு பேதுருவைக் குற்றப்படுத்தி இருக்க முடியும். ஆயினும்கூட, இயேசு அவரை மன்னித்தார். பேதுருவின் விசுவாசத்தை மீட்டெடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டி, ஆதித் திருச்சபையின் தூண்களில் ஒருவராய் வளர உதவினார். பின்னர் அப்போஸ்தலர் மற்றும் பிற நிருபங்களில், அவருடைய சீடர்களில் எத்தனை பேர் தங்கள் ஊழிய வாழ்க்கையில் இந்தக் குணாதிசயத்தைப் பின்பற்றினார்கள் என்பதை நாம் படிக்கிறோம். - தேவன் இன்று உங்களிடமும் என்னிடமும் அதையே எதிர்பார்க்கிறார்.- நீங்கள் மற்றவர்களை விமர்சித்து விரைவாகக் கண்டிக்கிறீர்களா? அல்லது மற்றவர்களை மன்னித்து ஆதரவளிக்கிறீர்களா என்பதைப் பார்க்க உங்கள் வாழ்க்கையை பகுப்பாய்வு செய்யுங்கள்.- யாரும் சரியானவர்கள் அல்ல; எவ்வாறாயினும், நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, கண்டிக்கவும், திருத்தவும், உதவவும் மற்றும் ஊக்கப்படுத்தவும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால், பல பலவீனமான, பாதிக்கப்படுகிற மற்றும் பின்தங்கிய நபர்களை இயேசுவுக்காக மீட்டெடுக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து மற்றவர்களை அன்பின் செயல்களால் ஊக்குவிக்கவும், அவர்களை உம்மிடம் திருப்பவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்.
அன்பினால் ஒருவரையொருவர் ஊக்குவியுங்கள்
“ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. எபிரேயர் 10:24 (TRV) "ஆதரவான" என்ற சொல்லுக்கு, ஆதரவு கொடுப்பது அல்லது ஆதரவு காட்டுவது என்று பொருள். ஆதரவளிக்கும் நபர்கள் இரக்கமுள்ளவர்களாயும், புரிந்துகொள்ளுகிறவர்களாயும் இருப்பார்கள். தேவையான நேரத்தில் உதவி செய்து ஊக்குவிப்பார்கள். மேலும், நாம் தோல்வியடைந்தாலோ, அல்லது ஏதேனும் தவறுகளைச் செய்தாலோ அவர்கள் நம்மைக் குற்றப்படுத்துவதில்லை. ஆதரவாக இருப்பதற்கு இயேசுவே சிறந்த உதாரணம். மதத் தலைவர்களின் வேலைக்காரருக்கு முன்பாகப் பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிதார். இயேசு பேதுருவைக் குற்றப்படுத்தி இருக்க முடியும். ஆயினும்கூட, இயேசு அவரை மன்னித்தார். பேதுருவின் விசுவாசத்தை மீட்டெடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டி, ஆதித் திருச்சபையின் தூண்களில் ஒருவராய் வளர உதவினார். பின்னர் அப்போஸ்தலர் மற்றும் பிற நிருபங்களில், அவருடைய சீடர்களில் எத்தனை பேர் தங்கள் ஊழிய வாழ்க்கையில் இந்தக் குணாதிசயத்தைப் பின்பற்றினார்கள் என்பதை நாம் படிக்கிறோம். - தேவன் இன்று உங்களிடமும் என்னிடமும் அதையே எதிர்பார்க்கிறார்.- நீங்கள் மற்றவர்களை விமர்சித்து விரைவாகக் கண்டிக்கிறீர்களா? அல்லது மற்றவர்களை மன்னித்து ஆதரவளிக்கிறீர்களா என்பதைப் பார்க்க உங்கள் வாழ்க்கையை பகுப்பாய்வு செய்யுங்கள்.- யாரும் சரியானவர்கள் அல்ல; எவ்வாறாயினும், நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, கண்டிக்கவும், திருத்தவும், உதவவும் மற்றும் ஊக்கப்படுத்தவும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால், பல பலவீனமான, பாதிக்கப்படுகிற மற்றும் பின்தங்கிய நபர்களை இயேசுவுக்காக மீட்டெடுக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து மற்றவர்களை அன்பின் செயல்களால் ஊக்குவிக்கவும், அவர்களை உம்மிடம் திருப்பவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

