வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர் 6:2 மற்றவர்களைப் பற்றியும் அவர்களின் தேவைகளைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பது தேவ பிள்ளைகளுக்கான மற்றொரு உன்னத குணமாகும். ‘தேவன் நம்மை விசாரிக்கிறவர்’ என்னும் கூற்று, வாசகர்களுக்கு மிகுந்த உறுதியையும் ஆறுதலையும் தருகிறது. ஆம், தேவனாலும் மற்றவர்களாலும் பராமரிக்கப்படுகிறோம் என்ற நிச்சயம் நம் அனைவருக்கும் தேவை. அவ்வாறே, நாமும் மற்றவர்களை விசாரிக்க வேண்டும். ரூத், நகோமியின் கதையைப் படிக்கும்போது, அவர்கள் இருவரும், ஒவ்வொருவருடையத் தேவைகளைப் பற்றி எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். நகோமி தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்யும் போது, ரூத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறாள். மறுபுறம், ரூத் தனது வயதான மாமியாரைக் கைவிட விரும்பவில்லை. அவருடன் இருப்பதிலும் அவரைக் கவனித்துக்கொள்வதிலும் அவள் உறுதியாயிருந்தாள். அக்கறையாய் இருக்க வேண்டுமானால், தன்னலமற்ற மனநிலை இன்றியமையாததாகும் . ஒரு நல்ல தலைவரும் தேவனுடைய பிள்ளையுமான ஒருவர், குழு உறுப்பினர்களையும் அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பற்றிய கவனத்துடன் இருப்பார். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கவனத்துடன் இருக்கப் பழகத் துவங்குங்கள். ஒரு உள்ளார்ந்த மாற்றத்தை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றிக் கவனிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கனிவோடிருக்கவும் மற்றவர்களிடம் அக்கறை கொள்ளவும் தயவுகூர்ந்து எனக்கு கிருபை தாரும். ஆமென்.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அப்படியே கிறிஸ்துவினுடைய...
“கலாத்தியர் 6:2 மற்றவர்களைப் பற்றியும் அவர்களின் தேவைகளைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பது தேவ பிள்ளைகளுக்கான மற்றொரு உன்னத குணமாகும். 'தேவன் நம்மை விசாரிக்கிறவர்' என்னும் கூற்று, வாசகர்களுக்கு மிகுந்த உறுதியையும் ஆறுதலையும் தருகிறது. ஆம், தேவனாலும் மற்றவர்களாலும் பராமரிக்கப்படுகிறோம் என்ற நிச்சயம் நம் அனைவருக்கும் தேவை. அவ்வாறே, நாமும் மற்றவர்களை விசாரிக்க வேண்டும். ரூத், நகோமியின் கதையைப் படிக்கும்போது, அவர்கள் இருவரும், ஒவ்வொருவருடையத் தேவைகளைப் பற்றி எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். நகோமி தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்யும் போது, ரூத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறாள். மறுபுறம், ரூத் தனது வயதான மாமியாரைக் கைவிட விரும்பவில்லை. அவருடன் இருப்பதிலும் அவரைக் கவனித்துக்கொள்வதிலும் அவள் உறுதியாயிருந்தாள். அக்கறையாய் இருக்க வேண்டுமானால், தன்னலமற்ற மனநிலை இன்றியமையாததாகும் . ஒரு நல்ல தலைவரும் தேவனுடைய பிள்ளையுமான ஒருவர், குழு உறுப்பினர்களையும் அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பற்றிய கவனத்துடன் இருப்பார். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கவனத்துடன் இருக்கப் பழகத் துவங்குங்கள். ஒரு உள்ளார்ந்த மாற்றத்தை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றிக் கவனிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கனிவோடிருக்கவும் மற்றவர்களிடம் அக்கறை கொள்ளவும் தயவுகூர்ந்து எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

