← செய்திகளுக்குத் திரும்பு
தினமும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்,
படத்தைப் பதிவிறக்கு

தினமும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்,

“திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். எபிரெயர் 3:13 பிறருக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு ஆதரவானவர்கள் அவர்களுக்கு உதவிச்செய்வார்கள். அவர்கள் புரிந்துகொண்டு, இரக்கங்காட்டி, உதவிச்செய்து, ஊக்கம் கொடுத்து ஆலோசனைகளை வழங்குவார்கள். நாம் தோல்வியடையும் போது அல்லது ஏதேனும் தவறுகளைச் செய்யும்போது அவர்கள் நம்மைக் நியாயம் தீர்ப்பதில்லை. ஆதரவாக இருப்பதற்கு இயேசுவே சிறந்த உதாரணம். பிரதான ஆசாரியரின் வேலைக்காரர் முன்பாக பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இயேசு பேதுருவை ஆக்கினைக்குட்படுத்தியிருக்கலாம். ஆயினும்கூட, இயேசு அவரை மன்னித்தார், பேதுருவின் விசுவாசத்தை மீட்டெடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார், மேலும் அவர் ஆதி திருச்சபையின் முக்கிய தலவைராக உதவிச் செய்தார். பின்னர் அப்போஸ்தலரின் நடபடிகள் மற்றும் பிற நிருபங்களில், இயேசுவின் சீஷர்களில் அநேகம் பேர் தங்கள் மிஷனரி வாழ்க்கையில் இந்த குணாதிசயத்தை பின்பற்றினார்கள் என்பதை நாம் படிக்கிறோம். # இன்று உங்களிடமும் என்னிடமும் கர்த்தர் அதையே எதிர்பார்க்கிறார்.# நீங்கள் மற்றவர்களை விமர்சித்து, விரைவாகக் கண்டிக்கிறீர்களா அல்லது மன்னித்து ஆதரவளிக்கிறீர்களா என்பதைப் பார்க்க உங்கள் வாழ்க்கையை பகுப்பாய்வு செய்யுங்கள்.# நேர்த்தியானவர் என்று எவரும் இல்லை. எனவே, நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, கண்டித்து திருத்தவும், உதவிச் செய்யவும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால், பல பலவீனமான, பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய நபர்களை இயேசுவிடம் மீட்டெடுக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இழந்த ஆத்துமாக்களை உமக்கு மீட்டுத்தர, ஆதரவாகவும் ஊக்கமளிக்கும் நபராகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். எபிரெயர் 3:13 பிறருக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு ஆதரவானவர்கள் அவர்களுக்கு உதவிச்செய்வார்கள். அவர்கள் புரிந்துகொண்டு, இரக்கங்காட்டி, உதவிச்செய்து, ஊக்கம் கொடுத்து ஆலோசனைகளை வழங்குவார்கள். நாம் தோல்வியடையும் போது அல்லது ஏதேனும் தவறுகளைச் செய்யும்போது அவர்கள் நம்மைக் நியாயம் தீர்ப்பதில்லை. ஆதரவாக இருப்பதற்கு இயேசுவே சிறந்த உதாரணம். பிரதான ஆசாரியரின் வேலைக்காரர் முன்பாக பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இயேசு பேதுருவை ஆக்கினைக்குட்படுத்தியிருக்கலாம். ஆயினும்கூட, இயேசு அவரை மன்னித்தார், பேதுருவின் விசுவாசத்தை மீட்டெடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார், மேலும் அவர் ஆதி திருச்சபையின் முக்கிய தலவைராக உதவிச் செய்தார். பின்னர் அப்போஸ்தலரின் நடபடிகள் மற்றும் பிற நிருபங்களில், இயேசுவின் சீஷர்களில் அநேகம் பேர் தங்கள் மிஷனரி வாழ்க்கையில் இந்த குணாதிசயத்தை பின்பற்றினார்கள் என்பதை நாம் படிக்கிறோம். # இன்று உங்களிடமும் என்னிடமும் கர்த்தர் அதையே எதிர்பார்க்கிறார்.# நீங்கள் மற்றவர்களை விமர்சித்து, விரைவாகக் கண்டிக்கிறீர்களா அல்லது மன்னித்து ஆதரவளிக்கிறீர்களா என்பதைப் பார்க்க உங்கள் வாழ்க்கையை பகுப்பாய்வு செய்யுங்கள்.# நேர்த்தியானவர் என்று எவரும் இல்லை. எனவே, நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, கண்டித்து திருத்தவும், உதவிச் செய்யவும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால், பல பலவீனமான, பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய நபர்களை இயேசுவிடம் மீட்டெடுக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இழந்த ஆத்துமாக்களை உமக்கு மீட்டுத்தர, ஆதரவாகவும் ஊக்கமளிக்கும் நபராகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.