← செய்திகளுக்குத் திரும்பு
அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாயிருக்கிறோம்.
படத்தைப் பதிவிறக்கு

அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர்...

“95:7 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் பதட்டமாயிருக்கிறீர்களா? உலகெங்கும் உள்ள நாடுகளுக்கும் மக்கள் கூட்டங்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களால் உங்கள் வாழ்வைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? பயப்பட வேண்டாம். நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள். ஆம்! இயேசு உங்களுக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்த உங்கள் நல்ல மேய்ப்பராயிருக்கிறார். அவர் உங்களை ஒருபொழுதும் வெறுக்கமாட்டார். நீங்கள் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளில் ஒருவராய் இருக்கிறபடியால், உங்களை மென்மையாய் நடத்தி, அன்போடு உங்கள் மேல் கவனமாய் இருக்கிறார். உங்கள் போராட்டத்திலும், தோல்வியிலும் அவர் உங்களுக்கு உதவி புரிவார். நீங்கள் காயப்படும்போதெல்லாம் அவர் உங்கள் ஆவியை மீட்டெடுத்து, உங்களைக் குணப்படுத்துகிறார். அவர் உங்களை ஆதரித்து, நீங்கள் பசியாயிருக்கும்போது உங்களுக்கு உணவளிக்கிறார். மகிழ்ச்சியாகவும் மனரம்மியமாகவும் இருங்கள். நீங்கள் தனியாக இல்லை என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: ஆண்டவரே, உமது மேய்ச்சலின் ஆடுகளில் ஒன்றாக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நீர் என்னை எங்கு அழைத்துச் சென்றாலும் உம்மீது நம்பிக்கை வைத்துஉமது வழிகாட்டுதலைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 9 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. சங்கீதம் 95:7 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் பதட்டமாயிருக்கிறீர்களா? உலகெங்கும் உள்ள நாடுகளுக்கும் மக்கள் கூட்டங்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களால் உங்கள் வாழ்வைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? பயப்பட வேண்டாம். நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள். ஆம்! இயேசு உங்களுக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்த உங்கள் நல்ல மேய்ப்பராயிருக்கிறார். அவர் உங்களை ஒருபொழுதும் வெறுக்கமாட்டார். நீங்கள் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளில் ஒருவராய் இருக்கிறபடியால், உங்களை மென்மையாய் நடத்தி, அன்போடு உங்கள் மேல் கவனமாய் இருக்கிறார். உங்கள் போராட்டத்திலும், தோல்வியிலும் அவர் உங்களுக்கு உதவி புரிவார். நீங்கள் காயப்படும்போதெல்லாம் அவர் உங்கள் ஆவியை மீட்டெடுத்து, உங்களைக் குணப்படுத்துகிறார். அவர் உங்களை ஆதரித்து, நீங்கள் பசியாயிருக்கும்போது உங்களுக்கு உணவளிக்கிறார். மகிழ்ச்சியாகவும் மனரம்மியமாகவும் இருங்கள். நீங்கள் தனியாக இல்லை என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: ஆண்டவரே, உமது மேய்ச்சலின் ஆடுகளில் ஒன்றாக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நீர் என்னை எங்கு அழைத்துச் சென்றாலும் உம்மீது நம்பிக்கை வைத்துஉமது வழிகாட்டுதலைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். ஆமென்.