← செய்திகளுக்குத் திரும்பு
கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

“ஞாயிற்றுக்கிழமை, 4 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11 நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவரும் எங்கும் நிறைந்தவருமாய் இருப்பவர். அவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் தமது இயல்பை நமக்கு வெளிப்படுத்தினார். நீங்கள் இப்பொழுது இதைப் படிப்பது தற்செயலான நிகழ்வல்ல. இயேசு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாயிருக்க விரும்புகிறார். எனவே நான் கேட்கிறேன்: இயேசுவுடன் உங்களுக்குத் தனிப்பட்ட உறவு இருக்கிறதா? அவர் உங்கள் வாழ்வின் மிக முக்கிய நபராயிருக்கிறாரா? இல்லை என்றால், அவரை எல்லாவற்றிற்கும் மையமாய் ஆக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். உங்கள் வாழ்க்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் அவருக்குக் கொடுத்து அவருடைய உபதேசங்களைப் பின்பற்றுங்கள். நீங்களே முடிவெடுக்கும் சுதந்திரத்தை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கை இயேசுவை மையமாகக் கொண்டால், எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஞானம், அறிவு மற்றும் ஜெயத்தை அவரிடத்தில் காண்பீர்கள். அவர் உங்கள் வாழ்வின் தேவனாய் இருக்கட்டும். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வாழவும், உம்மில் மெய்யான நிறைவையும் பரிபூரணத்தையும் அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 4 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11 நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவரும் எங்கும் நிறைந்தவருமாய் இருப்பவர். அவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் தமது இயல்பை நமக்கு வெளிப்படுத்தினார். நீங்கள் இப்பொழுது இதைப் படிப்பது தற்செயலான நிகழ்வல்ல. இயேசு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாயிருக்க விரும்புகிறார். எனவே நான் கேட்கிறேன்: இயேசுவுடன் உங்களுக்குத் தனிப்பட்ட உறவு இருக்கிறதா? அவர் உங்கள் வாழ்வின் மிக முக்கிய நபராயிருக்கிறாரா? இல்லை என்றால், அவரை எல்லாவற்றிற்கும் மையமாய் ஆக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். உங்கள் வாழ்க்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் அவருக்குக் கொடுத்து அவருடைய உபதேசங்களைப் பின்பற்றுங்கள். நீங்களே முடிவெடுக்கும் சுதந்திரத்தை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கை இயேசுவை மையமாகக் கொண்டால், எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஞானம், அறிவு மற்றும் ஜெயத்தை அவரிடத்தில் காண்பீர்கள். அவர் உங்கள் வாழ்வின் தேவனாய் இருக்கட்டும். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வாழவும், உம்மில் மெய்யான நிறைவையும் பரிபூரணத்தையும் அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.