← செய்திகளுக்குத் திரும்பு
தம்முடைய முத்திரை மோதிரத்தைப் போல் ஆக்குவார்
படத்தைப் பதிவிறக்கு

தம்முடைய முத்திரை மோதிரத்தைப் போல் ஆக்குவார்

“வியாழன், 3 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன். ஆகாய் 2:23 முத்திரை மோதிரம் என்பது ஒரு குறு முத்திரையாகும், இதில் பொதுவாக மோதிரம் பொருத்தப்பட்டிருக்கும், அதிகாரப்பூர்வ ஆவணத்தை அங்கீகரிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ கையொப்பத்திற்குப் பதிலாக, இது பயன்படுத்தப்படுகிறது. இன்று, உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பணியிடத்தில் நீங்கள் முக்கியமற்றவராய் உணரலாம். ஆனால், தேவன் உங்களை அவருடைய முத்திரை மோதிரமாய் மாற்றுவதாய் வாக்களிக்கிறார். நீங்கள் அவருடைய வாயாய் இருந்து அவருடைய திட்டங்களை பிறரது வாழ்விலும் உங்களது வாழ்விலும் செயல்படுத்துவீர்கள். பூமியில் நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூமியில் நீங்கள் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும். தேவன் உங்களை ஆழத்திலிருந்து மீட்டெடுத்து உன்னதங்களில் உங்களை உயர்த்துவார். தேவனை நம்புங்கள். பலவீனம், பாதுகாப்பின்மை , பயனற்ற தன்மை போன்று நீங்கள் உணர்ந்தாலும், இந்த உணர்ச்சிகள் உங்கள் அடையாளத்தை வரையறுக்க அனுமதிக்காதீர்கள். பெரிய காரியங்களைச் சாதிக்கத் தேவன் உங்களை முன்னறிந்திருக்கிறார். பெரிய கனவுகளோடு தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். நீங்கள் தோற்கடிக்கப்படமாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது முத்திரை மோதிரமாய்க் கருதியதற்கு மிகுந்த நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 3 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன். ஆகாய் 2:23 முத்திரை மோதிரம் என்பது ஒரு குறு முத்திரையாகும், இதில் பொதுவாக மோதிரம் பொருத்தப்பட்டிருக்கும், அதிகாரப்பூர்வ ஆவணத்தை அங்கீகரிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ கையொப்பத்திற்குப் பதிலாக, இது பயன்படுத்தப்படுகிறது. இன்று, உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பணியிடத்தில் நீங்கள் முக்கியமற்றவராய் உணரலாம். ஆனால், தேவன் உங்களை அவருடைய முத்திரை மோதிரமாய் மாற்றுவதாய் வாக்களிக்கிறார். நீங்கள் அவருடைய வாயாய் இருந்து அவருடைய திட்டங்களை பிறரது வாழ்விலும் உங்களது வாழ்விலும் செயல்படுத்துவீர்கள். பூமியில் நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூமியில் நீங்கள் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும். தேவன் உங்களை ஆழத்திலிருந்து மீட்டெடுத்து உன்னதங்களில் உங்களை உயர்த்துவார். தேவனை நம்புங்கள். பலவீனம், பாதுகாப்பின்மை , பயனற்ற தன்மை போன்று நீங்கள் உணர்ந்தாலும், இந்த உணர்ச்சிகள் உங்கள் அடையாளத்தை வரையறுக்க அனுமதிக்காதீர்கள். பெரிய காரியங்களைச் சாதிக்கத் தேவன் உங்களை முன்னறிந்திருக்கிறார். பெரிய கனவுகளோடு தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். நீங்கள் தோற்கடிக்கப்படமாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது முத்திரை மோதிரமாய்க் கருதியதற்கு மிகுந்த நன்றி செலுத்துகிறேன். ஆமென்.