வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.2 தெசலோனிக்கேயர் 3:3 நம்பமுடியாத நபர்கள் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கலாம். உங்கள் நம்பிக்கையை உடைத்தவர்களின் உறவுகளைக் கடந்து செல்வது சவாலானதாய் இருக்கலாம். ஆனால், நம் தேவன் எப்பொழுதும் நம்பத்தகுந்தவர், தம்முடைய அன்பில் உறுதியானவர் என்று நீங்கள் ஆறுதலடையுங்கள். தேவன் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பது முக்கியம். உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சவால்களுக்கும், அவற்றின் சிக்கலான தன்மையை சரிப்படுத்துவதற்கும் அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார். தேவன் ஒரு வாக்குத்தத்தைக் கொடுக்கும்போது, அவர் அதைத் தவறாமல் நிறைவேற்றுவார் என்று நீங்கள் உறுதியாய் நம்புங்கள். அவருடைய நம்பகத்தன்மை அசைக்க முடியாதது. அவர் உங்களை ஒருபொழுதும் ஏமாற்ற மாட்டார். அவர் ஒருவரே இறுதிவரை உண்மையுள்ளவரும், முழுமையாக நம்பக்கூடியவருமாய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
கர்த்தர் உண்மையுள்ளவர்
“வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.2 தெசலோனிக்கேயர் 3:3 நம்பமுடியாத நபர்கள் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கலாம். உங்கள் நம்பிக்கையை உடைத்தவர்களின் உறவுகளைக் கடந்து செல்வது சவாலானதாய் இருக்கலாம். ஆனால், நம் தேவன் எப்பொழுதும் நம்பத்தகுந்தவர், தம்முடைய அன்பில் உறுதியானவர் என்று நீங்கள் ஆறுதலடையுங்கள். தேவன் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பது முக்கியம். உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சவால்களுக்கும், அவற்றின் சிக்கலான தன்மையை சரிப்படுத்துவதற்கும் அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார். தேவன் ஒரு வாக்குத்தத்தைக் கொடுக்கும்போது, அவர் அதைத் தவறாமல் நிறைவேற்றுவார் என்று நீங்கள் உறுதியாய் நம்புங்கள். அவருடைய நம்பகத்தன்மை அசைக்க முடியாதது. அவர் உங்களை ஒருபொழுதும் ஏமாற்ற மாட்டார். அவர் ஒருவரே இறுதிவரை உண்மையுள்ளவரும், முழுமையாக நம்பக்கூடியவருமாய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

