புதன், 11 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன் அப்போஸ்தலர் 2: 18. இயேசு தம்முடைய பரிசுத்த ஆவியை தம் சீஷர்கள் அனைவருக்கும், தருவதாக வாக்குறுதி அளித்தார்.நம் வாழ்வின் இறுதிவரை அவருடைய சாட்சியாக வாழ நமக்கு பரிசுத்த ஆவியின் வல்லமையை தருகிறார். * நீங்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறீர்களா?* அவருடைய சீஷராக,ஒரு போர்வீரராக, தீமையை எதிர்த்து நல்ல போராட்டத்தை போராட, ஆண்டவருக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* அழிந்து வரும் ஆன்மாக்களுக்காக போராடி இருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும்.* ஏனென்றால், நம்முடைய போர் ஆயுதங்கள் மாம்சத்துக்குரியவை அல்ல, ஆனால் அவை சாத்தானின் கோட்டைகளை அழிக்கும் தெய்வீக வல்லமை கொண்டவை என்று வேதாகமம் சொல்கிறது.* வரவிருக்கும் கடைசிக் கால யுத்தத்துக்கு உங்களைச் சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறார். * பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? இல்லை என்றால் இன்றே இயேசுவிடம் கேளுங்கள்.* கர்த்தர் தம்முடைய ஆவியை உங்கள் மீது பொழிவார்.* இதை அலட்சியம் செய்யாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு பரிசுத்த ஆவியானவர் தேவை. நீர் வாக்களித்தப்படி என்னை நிரப்பும். ஆமென்.
கர்த்தர் தமது ஆவியை உங்கள் மீது ஊற்றுவார்.
“புதன், 11 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன் அப்போஸ்தலர் 2: 18. இயேசு தம்முடைய பரிசுத்த ஆவியை தம் சீஷர்கள் அனைவருக்கும், தருவதாக வாக்குறுதி அளித்தார்.நம் வாழ்வின் இறுதிவரை அவருடைய சாட்சியாக வாழ நமக்கு பரிசுத்த ஆவியின் வல்லமையை தருகிறார். * நீங்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறீர்களா?* அவருடைய சீஷராக,ஒரு போர்வீரராக, தீமையை எதிர்த்து நல்ல போராட்டத்தை போராட, ஆண்டவருக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* அழிந்து வரும் ஆன்மாக்களுக்காக போராடி இருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும்.* ஏனென்றால், நம்முடைய போர் ஆயுதங்கள் மாம்சத்துக்குரியவை அல்ல, ஆனால் அவை சாத்தானின் கோட்டைகளை அழிக்கும் தெய்வீக வல்லமை கொண்டவை என்று வேதாகமம் சொல்கிறது.* வரவிருக்கும் கடைசிக் கால யுத்தத்துக்கு உங்களைச் சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறார். * பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? இல்லை என்றால் இன்றே இயேசுவிடம் கேளுங்கள்.* கர்த்தர் தம்முடைய ஆவியை உங்கள் மீது பொழிவார்.* இதை அலட்சியம் செய்யாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு பரிசுத்த ஆவியானவர் தேவை. நீர் வாக்களித்தப்படி என்னை நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

