← செய்திகளுக்குத் திரும்பு
நீதிமான்கள் தங்கள் நண்பர்களைக் கவனமாய்த் தேர்ந்தெடுக்கிறார்கள்
படத்தைப் பதிவிறக்கு

நீதிமான்கள் தங்கள் நண்பர்களைக் கவனமாய்த் தேர்ந்தெடுக்கிறார்கள்

“திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்;ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.நீதிமொழிகள் 12:26 (TCV) "உன் நண்பனைப் பற்றிச் சொல்லு, நீ யார் என்று நான் உனக்குச் சொல்கிறேன்" என்கிறது ஒரு பிரபலமான பழமொழி. இது நட்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கின்றனர்? மற்றவர்களுக்கு நீங்கள் எப்படிப்பட்ட நண்பராய் விளங்குகிறீர்கள்? இரண்டு அம்சங்களும் வாழ்க்கையில் சமமாய் முக்கியமானவையாகும். தெய்வபக்தியற்றவர்களுடன் நேரத்தைச் செலவழித்து, அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் நீங்கள் தொலைந்து போகும் அபாயம் உள்ளது. நீங்கள் தேவனின் பிள்ளையாக, உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஞானமாய் இருப்பது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவை உங்கள் நண்பராக்குங்கள். அவர் நம்பகமானவரும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமுமான துண்மையுமாய் இருப்பவர். உங்களுக்கு ஞானமான ஆலோசனையையும் வழிநடத்துதலையும் அவரால் எப்பொழுதும் வழங்க முடியும். அவர் மட்டுமே உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார். எனவே, இயேசுவோடு நேரத்தைச் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பானதாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் நண்பராய் இரும். மற்றவர்களுக்கு நல்ல நண்பனாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்;ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.நீதிமொழிகள் 12:26 (TCV) “உன் நண்பனைப் பற்றிச் சொல்லு, நீ யார் என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்கிறது ஒரு பிரபலமான பழமொழி. இது நட்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கின்றனர்? மற்றவர்களுக்கு நீங்கள் எப்படிப்பட்ட நண்பராய் விளங்குகிறீர்கள்? இரண்டு அம்சங்களும் வாழ்க்கையில் சமமாய் முக்கியமானவையாகும். தெய்வபக்தியற்றவர்களுடன் நேரத்தைச் செலவழித்து, அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் நீங்கள் தொலைந்து போகும் அபாயம் உள்ளது. நீங்கள் தேவனின் பிள்ளையாக, உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஞானமாய் இருப்பது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவை உங்கள் நண்பராக்குங்கள். அவர் நம்பகமானவரும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமுமான துண்மையுமாய் இருப்பவர். உங்களுக்கு ஞானமான ஆலோசனையையும் வழிநடத்துதலையும் அவரால் எப்பொழுதும் வழங்க முடியும். அவர் மட்டுமே உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார். எனவே, இயேசுவோடு நேரத்தைச் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பானதாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் நண்பராய் இரும். மற்றவர்களுக்கு நல்ல நண்பனாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.