← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவே ஜீவ அப்பம்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவே ஜீவ அப்பம்.

“செவ்வாய், 9 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35 உலகின் பெரும்பாலான பகுதிகளில் ரொட்டி(அப்பம்) மிகமுக்கிய உணவாகும். அப்பமும் தண்ணீரும் ஒரு நபரை நீண்ட காலம் வாழ வைக்கும். இருப்பினும், அதைவிட முக்கியமான வேறொரு வகையான அப்பம் உள்ளது, அது தான் தாமே ஜீவ அப்பம் என்று சொன்ன இயேசு. இயேசு நமக்கு வாழ்வளிக்க வந்தார். அவர் நம் வாழ்வில் இருக்கும்பொழுது, நம் ஆத்துமாவைப் போஷித்து, நம் சரீரத்தைப் பலப்படுத்துவார். அன்பு, மன்னிப்பு, சமாதானம் என நம் ஆத்துமாவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களனைத்தையும் அவர் தருகிறார். அதன்மூலம் நாம் ஒருபொழுதும் பசியடைவதுமில்லை, தாகமடைவதுமில்லை. உங்கள் வாழ்க்கையில் இயேசு இருந்தால், அவர் உங்கள் மனதின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவார். நீங்கள் வேதனையில் இருக்கும்போது அவர் உங்களுக்கு ஆறுதலளிப்பவராகவும், ஆலோசனை தேவைப்படும்போது ஆலோசகராகவும், நீங்கள் யாரிடமாவது பேச வேண்டுமென்று நினைக்கும்போது அவர் உங்களோடு பேசுவதற்கு நண்பராகவும் இருப்பார். அவர் உங்களை ஒருபொழுதும் விட்டுவிலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை. அவர் உங்களுக்காக எப்பொழுதும் உங்களோடு இருக்கிறார் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் நீர் எனக்கு நிரந்தரமாகத் தேவை. தயவுகூர்ந்து என் இருதயத்தில் வந்து என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இருந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35 உலகின் பெரும்பாலான பகுதிகளில் ரொட்டி(அப்பம்) மிகமுக்கிய உணவாகும். அப்பமும் தண்ணீரும் ஒரு நபரை நீண்ட காலம் வாழ வைக்கும். இருப்பினும், அதைவிட முக்கியமான வேறொரு வகையான அப்பம் உள்ளது, அது தான் தாமே ஜீவ அப்பம் என்று சொன்ன இயேசு. இயேசு நமக்கு வாழ்வளிக்க வந்தார். அவர் நம் வாழ்வில் இருக்கும்பொழுது, நம் ஆத்துமாவைப் போஷித்து, நம் சரீரத்தைப் பலப்படுத்துவார். அன்பு, மன்னிப்பு, சமாதானம் என நம் ஆத்துமாவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களனைத்தையும் அவர் தருகிறார். அதன்மூலம் நாம் ஒருபொழுதும் பசியடைவதுமில்லை, தாகமடைவதுமில்லை. உங்கள் வாழ்க்கையில் இயேசு இருந்தால், அவர் உங்கள் மனதின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவார். நீங்கள் வேதனையில் இருக்கும்போது அவர் உங்களுக்கு ஆறுதலளிப்பவராகவும், ஆலோசனை தேவைப்படும்போது ஆலோசகராகவும், நீங்கள் யாரிடமாவது பேச வேண்டுமென்று நினைக்கும்போது அவர் உங்களோடு பேசுவதற்கு நண்பராகவும் இருப்பார். அவர் உங்களை ஒருபொழுதும் விட்டுவிலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை. அவர் உங்களுக்காக எப்பொழுதும் உங்களோடு இருக்கிறார் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் நீர் எனக்கு நிரந்தரமாகத் தேவை. தயவுகூர்ந்து என் இருதயத்தில் வந்து என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இருந்தருளும். ஆமென்.