← செய்திகளுக்குத் திரும்பு
தேவ இரக்கத்தைச் சார்ந்துகொள்ளுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தேவ இரக்கத்தைச் சார்ந்துகொள்ளுங்கள்.

“புதன், 10 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். ரோமர் 9:16 தேவன் இரக்கமும், உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார், என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாகச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாகச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். நம்முடைய கிரியைகளினாலும், தகுதியினாலும் தேவ இரக்கம் உண்டாகாமல், அது, விசுவாசத்தினால் உண்டாகும் ஈவாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே தேவ இரக்கத்தின் உன்னத வெளிப்பாடு. பிதாவினிடத்திற்கு வழி காட்டவும், நம் பாவங்களுக்காக மரிக்கவும் அவர் பூமிக்கு வந்தார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயேசுவை விசுவாசித்து, திறந்த இருதயத்தோடு அவரிடம் செல்வதுதான். மனம் திரும்பிய இருதயத்துடன் இயேசுவிடம் வரும்போது, அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். தேவ இரக்கத்தைப் பெறுவதற்கு நமக்குத் தாழ்மையும், விசுவாசமும் தேவை. அவர் நமக்குத் தேவை என்பதை நாம் ஒப்புக்கொண்டு, நமது பெருமையை கீழிறக்கி வைக்க வேண்டும். இதைச் செய்யும்போது, அவருடைய கிருபையையும், அன்பையும் முழுமையாய் அனுபவிக்க முடியும். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மேல் நம்பிக்கையாயிருந்து உமது இரக்கத்தை எப்பொழுதும் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 10 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். ரோமர் 9:16 தேவன் இரக்கமும், உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார், என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாகச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாகச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். நம்முடைய கிரியைகளினாலும், தகுதியினாலும் தேவ இரக்கம் உண்டாகாமல், அது, விசுவாசத்தினால் உண்டாகும் ஈவாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே தேவ இரக்கத்தின் உன்னத வெளிப்பாடு. பிதாவினிடத்திற்கு வழி காட்டவும், நம் பாவங்களுக்காக மரிக்கவும் அவர் பூமிக்கு வந்தார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயேசுவை விசுவாசித்து, திறந்த இருதயத்தோடு அவரிடம் செல்வதுதான். மனம் திரும்பிய இருதயத்துடன் இயேசுவிடம் வரும்போது, அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். தேவ இரக்கத்தைப் பெறுவதற்கு நமக்குத் தாழ்மையும், விசுவாசமும் தேவை. அவர் நமக்குத் தேவை என்பதை நாம் ஒப்புக்கொண்டு, நமது பெருமையை கீழிறக்கி வைக்க வேண்டும். இதைச் செய்யும்போது, அவருடைய கிருபையையும், அன்பையும் முழுமையாய் அனுபவிக்க முடியும். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மேல் நம்பிக்கையாயிருந்து உமது இரக்கத்தை எப்பொழுதும் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.