புதன்கிழமை, 18 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.நீதிமொழிகள் 13:12 நீங்கள் எதிர்பார்த்ததைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதோ அல்லது மறுப்பை எதிர்கொள்வதோ இருதயத்தை உலுக்கும். முன்னோக்கி நகர்வது அர்த்தமற்றதெனத் திடீரென்று நீங்கள் உணரலாம், அல்லது வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்றுகூட நினைக்கலாம். நீங்கள் ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் ஆழமாய் உணருகிறீர்களா? ஆதரவுக்காக இயேசுவை நோக்கிப் பாருங்கள். உங்கள் ஆசைகளை அவருடன் பகிர்ந்து கொண்டு அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள். அவர் உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் தேவைகளை உங்களுக்குச் சந்திப்பார். இந்த உலகத்தின் மனிதர்களும் சூழ்நிலைகளும் உங்களை வீழ்த்தலாம். இருப்பினும், நீங்கள் இயேசுவில் கவனம் செலுத்தினால், அவர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் உங்களைக் கவனித்துக்கொண்டு, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்; சரியான நேரத்தில் அந்தத் தேவைகளை நிறைவேற்றுவார். அவர் உங்கள் ஜீவனுக்கும் பெலத்துக்கும் ஆதாரமாயிருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உலகில் என் நம்பிக்கையை வைக்காமல், என் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் உம்மையே சார்ந்திருக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்.
இயேசுவே உங்கள் ஜீவ விருட்சம்
“புதன்கிழமை, 18 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.நீதிமொழிகள் 13:12 நீங்கள் எதிர்பார்த்ததைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதோ அல்லது மறுப்பை எதிர்கொள்வதோ இருதயத்தை உலுக்கும். முன்னோக்கி நகர்வது அர்த்தமற்றதெனத் திடீரென்று நீங்கள் உணரலாம், அல்லது வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்றுகூட நினைக்கலாம். நீங்கள் ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் ஆழமாய் உணருகிறீர்களா? ஆதரவுக்காக இயேசுவை நோக்கிப் பாருங்கள். உங்கள் ஆசைகளை அவருடன் பகிர்ந்து கொண்டு அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள். அவர் உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் தேவைகளை உங்களுக்குச் சந்திப்பார். இந்த உலகத்தின் மனிதர்களும் சூழ்நிலைகளும் உங்களை வீழ்த்தலாம். இருப்பினும், நீங்கள் இயேசுவில் கவனம் செலுத்தினால், அவர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் உங்களைக் கவனித்துக்கொண்டு, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்; சரியான நேரத்தில் அந்தத் தேவைகளை நிறைவேற்றுவார். அவர் உங்கள் ஜீவனுக்கும் பெலத்துக்கும் ஆதாரமாயிருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உலகில் என் நம்பிக்கையை வைக்காமல், என் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் உம்மையே சார்ந்திருக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

