← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் ஆத்தும வாஞ்சை என்ன?
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் ஆத்தும வாஞ்சை என்ன?

“திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது. ஏசாயா 26:8 இரவும் பகலும் கர்த்தருடைய வேத்ததில் பிரியமாய் இருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் மேலாய்த் தேவனுடைய நாமத்தில் உங்கள் நம்பிக்கையை வைக்கிறீர்களா? தேவ சமுகத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? நீங்கள் எப்பொழுதும் அவருடன் உறவாடுகிறீர்களா? தேவனுடனான நெருக்கம் ஓர் அழகான அனுபவம். என்றாலும், நமது அன்றாட நடைமுறைகளுக்கும் பொறுப்புகளுக்கும் மத்தியில் தேவனுடனான இந்தத் தொடர்பைப் பேணுவது எப்பொழுதும் எளிதானதல்ல. அங்குதான் பரிசுத்த ஆவியானவர் தேவைப்படுகிறார். நமது அன்றாடக் கடமைகளைச் செய்துக் கொண்டிருக்கும்போதும், நாம் தேவனோடு உறவாட ஆவியானவரின் உதவியைச் சார்ந்திருக்கலாம். பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலால், நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் தேவ அன்பையும் பிரசன்னத்தையும் நாம் அனுபவிக்க முடியும். நீங்கள், மறுரூப அனுபவத்தைப் பெறவும், வாழ்க்கையை மகிழ்ச்சியோடு முழுமையாய் அனுபவிக்கவும் விரும்பினால், தினமும் தேவனோடு உறவாடுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். அவரிடம் ஜெபித்து, அவருடைய வார்த்தையைப் படித்து, நீங்கள் செய்வதெல்லாவற்றிலும் அவருடைய பிரசன்னத்தைத் தேடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பிரசன்னத்தில் மூழ்கி, என் ஆத்துமாவில் உம்மோடு இணைந்திருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது. ஏசாயா 26:8 இரவும் பகலும் கர்த்தருடைய வேத்ததில் பிரியமாய் இருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் மேலாய்த் தேவனுடைய நாமத்தில் உங்கள் நம்பிக்கையை வைக்கிறீர்களா? தேவ சமுகத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? நீங்கள் எப்பொழுதும் அவருடன் உறவாடுகிறீர்களா? தேவனுடனான நெருக்கம் ஓர் அழகான அனுபவம். என்றாலும், நமது அன்றாட நடைமுறைகளுக்கும் பொறுப்புகளுக்கும் மத்தியில் தேவனுடனான இந்தத் தொடர்பைப் பேணுவது எப்பொழுதும் எளிதானதல்ல. அங்குதான் பரிசுத்த ஆவியானவர் தேவைப்படுகிறார். நமது அன்றாடக் கடமைகளைச் செய்துக் கொண்டிருக்கும்போதும், நாம் தேவனோடு உறவாட ஆவியானவரின் உதவியைச் சார்ந்திருக்கலாம். பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலால், நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் தேவ அன்பையும் பிரசன்னத்தையும் நாம் அனுபவிக்க முடியும். நீங்கள், மறுரூப அனுபவத்தைப் பெறவும், வாழ்க்கையை மகிழ்ச்சியோடு முழுமையாய் அனுபவிக்கவும் விரும்பினால், தினமும் தேவனோடு உறவாடுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். அவரிடம் ஜெபித்து, அவருடைய வார்த்தையைப் படித்து, நீங்கள் செய்வதெல்லாவற்றிலும் அவருடைய பிரசன்னத்தைத் தேடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பிரசன்னத்தில் மூழ்கி, என் ஆத்துமாவில் உம்மோடு இணைந்திருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.