செவ்வாய், 17 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்பிலிப்பியர் 4:8 நமக்கு ஓர் பெரிய அழைப்பு உள்ளது. உயர்ந்த இலக்கை அடையவும் சிறந்து விளங்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வுலகின் தரக்குறைவான விஷயங்களுக்காகத் தெய்வீகக் குணங்களை விட்டுக்கொடுக்க வேண்டாம். மாறாக, உயர்ந்த இலக்குளில் நமது எண்ணங்களைப் பதியவைத்து, நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்போமாக. தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கையை வாழுங்கள், அவர் போற்றும் குண நலன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் மற்றவர்களின் பார்வையில் நாமும் போற்றத்தக்கவர்களாய் மாறுவோம். நாம் மற்றவர்களுக்கு ஒரு வாய்க்காலாகவும், கவனத்தை ஈர்ப்போராகவும் செயல்பட்டு, அவர்களை, இயேசுவையும் அவருடைய போதனைகளையும் நோக்கி வழிநடத்தலாம். வாழ்க்கை ஒவ்வொரு நாளும் அதன் சவால்களை முன்வைக்கிறது. ஆனால் இந்த உலகத்தின் அழுத்தங்களுக்கு நாம் அடிபணியக்கூடாது. அதற்குப் பதிலாய், நாம் உறுதியுடன் இருந்து போற்றத்தக்கதும் தேவனின் பாராட்டுக்குத் தகுதியானவைகளும் ஆனவற்றில் கவனம் செலுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, போற்றத்தக்கதும் மதிப்புமிக்கதுமான காரியங்களில் கவனம் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நற்கீர்த்தி உள்ளவைகளின் மேல் உங்கள் சிந்தையைப் பதியவையுங்கள்
“செவ்வாய், 17 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்பிலிப்பியர் 4:8 நமக்கு ஓர் பெரிய அழைப்பு உள்ளது. உயர்ந்த இலக்கை அடையவும் சிறந்து விளங்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வுலகின் தரக்குறைவான விஷயங்களுக்காகத் தெய்வீகக் குணங்களை விட்டுக்கொடுக்க வேண்டாம். மாறாக, உயர்ந்த இலக்குளில் நமது எண்ணங்களைப் பதியவைத்து, நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்போமாக. தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கையை வாழுங்கள், அவர் போற்றும் குண நலன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் மற்றவர்களின் பார்வையில் நாமும் போற்றத்தக்கவர்களாய் மாறுவோம். நாம் மற்றவர்களுக்கு ஒரு வாய்க்காலாகவும், கவனத்தை ஈர்ப்போராகவும் செயல்பட்டு, அவர்களை, இயேசுவையும் அவருடைய போதனைகளையும் நோக்கி வழிநடத்தலாம். வாழ்க்கை ஒவ்வொரு நாளும் அதன் சவால்களை முன்வைக்கிறது. ஆனால் இந்த உலகத்தின் அழுத்தங்களுக்கு நாம் அடிபணியக்கூடாது. அதற்குப் பதிலாய், நாம் உறுதியுடன் இருந்து போற்றத்தக்கதும் தேவனின் பாராட்டுக்குத் தகுதியானவைகளும் ஆனவற்றில் கவனம் செலுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, போற்றத்தக்கதும் மதிப்புமிக்கதுமான காரியங்களில் கவனம் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

