← செய்திகளுக்குத் திரும்பு
உத்தமமாய் நடக்க கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உத்தமமாய் நடக்க கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றுங்கள்.

“வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார்க்கத்தார் பாக்கியவான்கள். சங்கீதம் 119:1 அன்பு தேவ பிள்ளையே, - நீங்கள் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறீர்கள்?- "நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்." என்று இயேசு சொன்னார் - தேவன் மீதான உங்கள் அன்பைச் சரிபார்க்க இதைப் பற்றிச் சிந்தியுங்கள்.- "பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்" என்று வேதம் கூறுகிறது.- நீங்கள் இயேசுவை நேசித்தால், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவீர்கள். - நீங்கள் அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படியும்போது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் அவருடைய பாதுகாப்பை அனுபவிப்பீர்கள்.- கீழ்ப்படிதல், இயேசுவுடனான உங்கள் உறவைப் பலப்படுத்தி ஆழமாக்குகிறது. மேலும், வாழ்க்கையின் சவால்களை மிக எளிதாகவும், நம்பிக்கையுடனும் கடக்க உதவிச் செய்கிறது.- நீங்கள் தொடர்ந்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, ஆசீர்வாதத்தையும் மகிழ்ச்சியையும் உங்கள் மேல் பொழியப் பண்ணுவார். அது, மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்த வாழ்க்கை வாழ உங்களுக்கு உதவிச் செய்யும். எனவே, தேவனுடைய வார்த்தைகளை முதன்மைப்படுத்தி, அவருடைய அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றி நேர்மையுடன் நடந்துக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் உமது அறிவுரைகளைப் பின்பற்ற எனக்கு உதவிச் செய்யும். இதனால் நான் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்கட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார்க்கத்தார் பாக்கியவான்கள். சங்கீதம் 119:1 அன்பு தேவ பிள்ளையே, - நீங்கள் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறீர்கள்?- “நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.” என்று இயேசு சொன்னார் - தேவன் மீதான உங்கள் அன்பைச் சரிபார்க்க இதைப் பற்றிச் சிந்தியுங்கள்.- “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” என்று வேதம் கூறுகிறது.- நீங்கள் இயேசுவை நேசித்தால், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவீர்கள். - நீங்கள் அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படியும்போது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் அவருடைய பாதுகாப்பை அனுபவிப்பீர்கள்.- கீழ்ப்படிதல், இயேசுவுடனான உங்கள் உறவைப் பலப்படுத்தி ஆழமாக்குகிறது. மேலும், வாழ்க்கையின் சவால்களை மிக எளிதாகவும், நம்பிக்கையுடனும் கடக்க உதவிச் செய்கிறது.- நீங்கள் தொடர்ந்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, ஆசீர்வாதத்தையும் மகிழ்ச்சியையும் உங்கள் மேல் பொழியப் பண்ணுவார். அது, மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்த வாழ்க்கை வாழ உங்களுக்கு உதவிச் செய்யும். எனவே, தேவனுடைய வார்த்தைகளை முதன்மைப்படுத்தி, அவருடைய அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றி நேர்மையுடன் நடந்துக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் உமது அறிவுரைகளைப் பின்பற்ற எனக்கு உதவிச் செய்யும். இதனால் நான் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்கட்டும். ஆமென்.