← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்காகச் செய்த அற்புதமான காரியங்கள் அனைத்தையும் சிந்தித்துப்பாருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுக்காகச் செய்த அற்புதமான காரியங்கள் அனைத்தையும்...

“சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 1 சாமுவேல் 12: 24 அன்பு தேவ பிள்ளையே,உங்கள் வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத் திருப்பங்களும் மாறுதல்களும் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறதா? உங்கள் எதிர்காலத்தையும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பற்றிப் பயப்படுகிறீர்களா? உங்கள் இருதயத்தையும் மனதையும் அமைதிப்படுத்த சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, உங்கள் வாழ்வில் நடந்த எதிர்பாரா அற்புதங்கள், வெற்றியின் தருணங்கள், விடுதலை மற்றும் மகிழ்ச்சியின் காரியங்களை எண்ணிப் பாருங்கள். இதுவரைக்கும் தேவன் உங்களை எவ்வாறு பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இது உங்கள் நாளையத்தினத்தைக் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தும். தேவன் உங்கள் பாதுகாப்பு என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர் உறங்காமலும் தூங்காமலும் உங்களைக் கவனித்துக்கொள்வார். உங்கள் வாழ்க்கையில் உள்ள அருமையான காரியங்களனைத்தையும் எண்ணித் துதித்துக் கொண்டே இருங்கள். உங்களை இவ்வளவு தூரம் சுமந்தவர் எதிர்காலத்திலும் உங்களைப் பாதுகாக்க உண்மையுள்ளவராகையால் பதற்றமடைய வேண்டாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, நீர் எனக்குத் தந்த எல்லா ஆசீர்வாதங்களும் என்னுடைய நினைவிற்கு வருகின்றன. இதுவரை என்னைப் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருக்க நீர் செய்த அற்புதமான காரியங்களனைத்துக்கும் நான் நன்றியோடு இருக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றிய எனது பயத்தைப் போக்க என் நம்பிக்கையை பலப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 1 சாமுவேல் 12: 24 அன்பு தேவ பிள்ளையே,உங்கள் வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத் திருப்பங்களும் மாறுதல்களும் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறதா? உங்கள் எதிர்காலத்தையும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பற்றிப் பயப்படுகிறீர்களா? உங்கள் இருதயத்தையும் மனதையும் அமைதிப்படுத்த சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, உங்கள் வாழ்வில் நடந்த எதிர்பாரா அற்புதங்கள், வெற்றியின் தருணங்கள், விடுதலை மற்றும் மகிழ்ச்சியின் காரியங்களை எண்ணிப் பாருங்கள். இதுவரைக்கும் தேவன் உங்களை எவ்வாறு பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இது உங்கள் நாளையத்தினத்தைக் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தும். தேவன் உங்கள் பாதுகாப்பு என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர் உறங்காமலும் தூங்காமலும் உங்களைக் கவனித்துக்கொள்வார். உங்கள் வாழ்க்கையில் உள்ள அருமையான காரியங்களனைத்தையும் எண்ணித் துதித்துக் கொண்டே இருங்கள். உங்களை இவ்வளவு தூரம் சுமந்தவர் எதிர்காலத்திலும் உங்களைப் பாதுகாக்க உண்மையுள்ளவராகையால் பதற்றமடைய வேண்டாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, நீர் எனக்குத் தந்த எல்லா ஆசீர்வாதங்களும் என்னுடைய நினைவிற்கு வருகின்றன. இதுவரை என்னைப் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருக்க நீர் செய்த அற்புதமான காரியங்களனைத்துக்கும் நான் நன்றியோடு இருக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றிய எனது பயத்தைப் போக்க என் நம்பிக்கையை பலப்படுத்தும். ஆமென்.