← செய்திகளுக்குத் திரும்பு
கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாய் இருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாய் இருக்கிறார்.

“புதன்கிழமை, 13 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசேயர் 3:11 இந்த உலகம், முக்கியமாய் முன்னுரிமைகளிலும் கோட்பாடுகளிலும் உள்ள வேற்றுமைகளினிமித்தமும், சுயநலத்தினிமித்தமும் ஏற்படும் மோதல்களால் கொந்தளிக்கிறது. மக்கள் ஒருவருக்கு மேல் மற்றொருவரைப் முக்கியப்படுத்தத் தொடங்கும்போது பிளவுகள் உருவாகின்றன, இதன் விளைவாகச் சச்சரவுகளும் துன்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால் தேவனோ பாரபட்சமற்றவராய் அனைவரையும் நேசிக்கிறார். மனுக்குலம் அனைத்தையும் மீட்பதற்காக இயேசு தம் ஜீவனைக் கொடுத்தார். எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நிறத்தையும் கலாச்சாரத்தையும் பொருட்படுத்தாமல், தம்மை நோக்கிக் கூப்பிடும் யாவரையும் எல்லோரையும் அவர் கேட்கிறார். 1. மற்றவர்களுடன் நீங்கள் எவ்வளவாய்க் கலந்திருக்கிறீர்கள்?2. எல்லோரையும் நீங்கள் சமமரியாதையுடன் நடத்துகிறீர்களா?அல்லது3. கல்வி, செல்வாக்கு, சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் ஜனங்களை வேறுபடுத்துகிறீர்களா?4. மற்றவர்களின் சாதி, கலாச்சாரம் அல்லது தொழிலின் அடிப்படையில் நீங்கள் பாகுபாடு காட்டுகிறீர்களா? # வாழ்க்கையில், இது போன்ற வேறுபாடுகளைச் சாதாரணமாகப் பார்த்து நீங்கள் வளர்ந்திருக்கலாம் அல்லது கற்பிக்கப்பட்டிருக்கலாம்.# ஆனால், தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு எதிரான இந்த பாரபட்சம் காட்டும் நடைமுறைகளைப் பரிசோதித்துப் பார்க்க நீங்கள் ஏன் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது?# எல்லோரையும் சமமான மரியாதையுடனும் அன்புடனும் நடத்த நம்மால் இயன்றவரை பாடுபடுவோம்.# அப்படிச் செய்வதினால், கிறிஸ்துவின் சுபாவத்தை ஜனங்கள் உங்கள்மூலம் அனுபவிப்பார்கள். வாருங்கள்! நம் வாழ்வின் மூலம் இவ்வுலகில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாமல், எல்லா விதங்களிலும் பிறருடன் கலந்திருக்க எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 13 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசேயர் 3:11 இந்த உலகம், முக்கியமாய் முன்னுரிமைகளிலும் கோட்பாடுகளிலும் உள்ள வேற்றுமைகளினிமித்தமும், சுயநலத்தினிமித்தமும் ஏற்படும் மோதல்களால் கொந்தளிக்கிறது. மக்கள் ஒருவருக்கு மேல் மற்றொருவரைப் முக்கியப்படுத்தத் தொடங்கும்போது பிளவுகள் உருவாகின்றன, இதன் விளைவாகச் சச்சரவுகளும் துன்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால் தேவனோ பாரபட்சமற்றவராய் அனைவரையும் நேசிக்கிறார். மனுக்குலம் அனைத்தையும் மீட்பதற்காக இயேசு தம் ஜீவனைக் கொடுத்தார். எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நிறத்தையும் கலாச்சாரத்தையும் பொருட்படுத்தாமல், தம்மை நோக்கிக் கூப்பிடும் யாவரையும் எல்லோரையும் அவர் கேட்கிறார். 1. மற்றவர்களுடன் நீங்கள் எவ்வளவாய்க் கலந்திருக்கிறீர்கள்?2. எல்லோரையும் நீங்கள் சமமரியாதையுடன் நடத்துகிறீர்களா?அல்லது3. கல்வி, செல்வாக்கு, சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் ஜனங்களை வேறுபடுத்துகிறீர்களா?4. மற்றவர்களின் சாதி, கலாச்சாரம் அல்லது தொழிலின் அடிப்படையில் நீங்கள் பாகுபாடு காட்டுகிறீர்களா? # வாழ்க்கையில், இது போன்ற வேறுபாடுகளைச் சாதாரணமாகப் பார்த்து நீங்கள் வளர்ந்திருக்கலாம் அல்லது கற்பிக்கப்பட்டிருக்கலாம்.# ஆனால், தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு எதிரான இந்த பாரபட்சம் காட்டும் நடைமுறைகளைப் பரிசோதித்துப் பார்க்க நீங்கள் ஏன் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது?# எல்லோரையும் சமமான மரியாதையுடனும் அன்புடனும் நடத்த நம்மால் இயன்றவரை பாடுபடுவோம்.# அப்படிச் செய்வதினால், கிறிஸ்துவின் சுபாவத்தை ஜனங்கள் உங்கள்மூலம் அனுபவிப்பார்கள். வாருங்கள்! நம் வாழ்வின் மூலம் இவ்வுலகில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாமல், எல்லா விதங்களிலும் பிறருடன் கலந்திருக்க எனக்கு உதவும். ஆமென்.