செவ்வாய், 12 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். நீதிமொழிகள் 22:4 பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். பெருமையினிமித்தம் சாத்தான் பரலோகத்தில் தனது விலைமதிப்பற்ற இடத்தை இழந்தான். இன்று, ஜனங்களை அதே இயல்பினால் தேவனுக்கு எதிராய் முரட்டாட்டம் செய்ய, அல்லது தேவனையும் அவருடைய ஆசிகளையும் நம்பாதிருக்க தூண்டுகிறான். பெருமை ஆணவத்தைக் கொண்டுவந்து, ஒரு நபரை மற்றவர்களின் வலி மற்றும் தேவைகளைக் குறித்த உணர்வற்றவராய் ஆக்குகிறது. தேவனுடைய குமாரனாய் இருந்தாலும், பூமியில் வாழ்ந்த காலம் முழுவதும் இயேசு தமது மனத்தாழ்மையை வெளிப்படுத்தினார். அவர் மரணபரியந்தம் தன்னைத் தாழ்த்தினதால், தேவன் அவருடைய நாமத்தை எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாய் உயர்த்தினார். # உங்கள் வாழ்க்கையைப் பரிசோதித்துப் பார்க்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.# மற்றவர்களுக்கு முன்பாக நீங்கள் எவ்வளவு பணிவாய் இருக்கிறீர்கள்?# உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளிடம் பணிவு காட்டுகிறீர்களா?# நிர்வாகிகள், வீட்டுப் பணியாட்கள் மற்றும் பிற உதவியாளர்கள் போன்று உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை அல்லது உங்களுக்குச் சேவை செய்பவர்களை எப்படி நடத்துகிறீர்கள்? # நமது நடையிலும் பேச்சிலும் பணிவு காட்டி இயேசுவின் நற்கந்தத்தைப் பரப்புவோமாக.# அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் பலருக்கு ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.# உங்கள் தாழ்மையைக் கவனிக்கும் தேவன், உங்களுக்கும் ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பார் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் நடையிலும் பேச்சிலும் தாழ்மையுடன் இருக்க எனக்கு உதவும். ஆமென்.
தாழ்மை என்பது கர்த்தருக்குப் பயப்படுதல்; அதன் பலன்...
“செவ்வாய், 12 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். நீதிமொழிகள் 22:4 பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். பெருமையினிமித்தம் சாத்தான் பரலோகத்தில் தனது விலைமதிப்பற்ற இடத்தை இழந்தான். இன்று, ஜனங்களை அதே இயல்பினால் தேவனுக்கு எதிராய் முரட்டாட்டம் செய்ய, அல்லது தேவனையும் அவருடைய ஆசிகளையும் நம்பாதிருக்க தூண்டுகிறான். பெருமை ஆணவத்தைக் கொண்டுவந்து, ஒரு நபரை மற்றவர்களின் வலி மற்றும் தேவைகளைக் குறித்த உணர்வற்றவராய் ஆக்குகிறது. தேவனுடைய குமாரனாய் இருந்தாலும், பூமியில் வாழ்ந்த காலம் முழுவதும் இயேசு தமது மனத்தாழ்மையை வெளிப்படுத்தினார். அவர் மரணபரியந்தம் தன்னைத் தாழ்த்தினதால், தேவன் அவருடைய நாமத்தை எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாய் உயர்த்தினார். # உங்கள் வாழ்க்கையைப் பரிசோதித்துப் பார்க்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.# மற்றவர்களுக்கு முன்பாக நீங்கள் எவ்வளவு பணிவாய் இருக்கிறீர்கள்?# உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளிடம் பணிவு காட்டுகிறீர்களா?# நிர்வாகிகள், வீட்டுப் பணியாட்கள் மற்றும் பிற உதவியாளர்கள் போன்று உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை அல்லது உங்களுக்குச் சேவை செய்பவர்களை எப்படி நடத்துகிறீர்கள்? # நமது நடையிலும் பேச்சிலும் பணிவு காட்டி இயேசுவின் நற்கந்தத்தைப் பரப்புவோமாக.# அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் பலருக்கு ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.# உங்கள் தாழ்மையைக் கவனிக்கும் தேவன், உங்களுக்கும் ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பார் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் நடையிலும் பேச்சிலும் தாழ்மையுடன் இருக்க எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

