வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். லூக்கா 1:28 இன்று சர்வதேச மகளிர் தினம். ஆகையால், அனைத்துப் பெண்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புள்ள வாசகரே, நீங்கள் கஷ்டங்கள் மற்றும் வேதனைகளால் மனமுடைந்திருக்கும் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் சூழ்நிலைகளைத் தேவன் மாற்றியமைக்க முடியும் என்று உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். நீங்கள் கிருபைபெற்றவர், கர்த்தர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் பிறருக்குத் தேவ தயவின் வாய்க்காலாய் இருக்க முடியும். கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தொடர்ந்து ஜீவனாகவும் நம்பிக்கையாகவும் நீங்கள் இருக்க வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். மேலும் இதை வாசிக்கும் ஆண் ஒவ்வொருவரும், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்துப் பெண்களுக்காகத் தேவனுக்கு நன்றி செலுத்தவும், அவர்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் உங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கவும் உங்களை ஊக்குவிக்கிறேன். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எங்கள் வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் உள்ள பெண்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் அவர்களை மென்மேலும் ஆசீர்வதித்து அவர்களைப் பெலப்படுத்தும்படி ஜெபிக்கிறோம். ஆமென்.
கிருபைபெற்றவளே வாழ்க!
“வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். லூக்கா 1:28 இன்று சர்வதேச மகளிர் தினம். ஆகையால், அனைத்துப் பெண்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புள்ள வாசகரே, நீங்கள் கஷ்டங்கள் மற்றும் வேதனைகளால் மனமுடைந்திருக்கும் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் சூழ்நிலைகளைத் தேவன் மாற்றியமைக்க முடியும் என்று உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். நீங்கள் கிருபைபெற்றவர், கர்த்தர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் பிறருக்குத் தேவ தயவின் வாய்க்காலாய் இருக்க முடியும். கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தொடர்ந்து ஜீவனாகவும் நம்பிக்கையாகவும் நீங்கள் இருக்க வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். மேலும் இதை வாசிக்கும் ஆண் ஒவ்வொருவரும், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்துப் பெண்களுக்காகத் தேவனுக்கு நன்றி செலுத்தவும், அவர்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் உங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கவும் உங்களை ஊக்குவிக்கிறேன். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எங்கள் வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் உள்ள பெண்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் அவர்களை மென்மேலும் ஆசீர்வதித்து அவர்களைப் பெலப்படுத்தும்படி ஜெபிக்கிறோம். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

