← செய்திகளுக்குத் திரும்பு
மகத்தான வெற்றி கிறிஸ்துவின் மூலம் உங்களுக்கு உண்டாகிறது.
படத்தைப் பதிவிறக்கு

மகத்தான வெற்றி கிறிஸ்துவின் மூலம் உங்களுக்கு உண்டாகிறது.

“திங்கட்கிழமை, 8 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37. * வாழ்க்கை சில நேரங்களில் சவாலானதாய் இருக்கலாம், மேலும் நீங்கள் விசித்திரமான அல்லது பாதகமான சூழ்நிலைகளில் கடந்து சென்று கடினமான நபர்களைக் கையாள நேரிடலாம்.* வாழ்க்கையில் வன்முறை, வறுமை, துயரம் அல்லது அநீதி போன்ற தொடர்ச்சியான கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது மனம் தளர்ந்து விடுவது இயல்பு.* இருப்பினும், வாழ்க்கை என்பது ஏற்றத் தாழ்வுகளும் எதிர்பாராத திருப்பங்களும் மாற்றங்களும் நிறைந்த பயணம் என்பதை நினைவிற்கொள்வது அவசியம். * எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களுடன் இருப்பதாகத் தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார்.* ஜெயங்கொள்வதற்கு அவர் உங்களுக்குக் கிருபையையும், பலத்தையும், தயவையும் தருவார். * எத்தகைய சிரமங்களை நீங்கள் எதிர்கொண்டாலும், கிறிஸ்துவை நம்பி முன்னேறுவதே முதன்மையானது.* முன்னோக்கிச் செல்லும் பாதை இருட்டாகவும், நிச்சயமற்றதாகவும் தோன்றினாலும், அவர்மூலம் மகத்தான வெற்றி உங்களுடையது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.* பலங்கொண்டு திடமனதாயிருங்கள். ஏனென்றால் தேவன் உங்களுக்காக யுத்தம் செய்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சோதனைகளை வெல்ல எனக்கு உதவிச் செய்யும். முன்னோக்கிச் செல்வதற்கும், மகத்தான வெற்றியை உம்மால் அனுபவிப்பதற்கும் தைரியத்தையும், பெலனையும் விடாமுயற்சியையும் எனக்குத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37. * வாழ்க்கை சில நேரங்களில் சவாலானதாய் இருக்கலாம், மேலும் நீங்கள் விசித்திரமான அல்லது பாதகமான சூழ்நிலைகளில் கடந்து சென்று கடினமான நபர்களைக் கையாள நேரிடலாம்.* வாழ்க்கையில் வன்முறை, வறுமை, துயரம் அல்லது அநீதி போன்ற தொடர்ச்சியான கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது மனம் தளர்ந்து விடுவது இயல்பு.* இருப்பினும், வாழ்க்கை என்பது ஏற்றத் தாழ்வுகளும் எதிர்பாராத திருப்பங்களும் மாற்றங்களும் நிறைந்த பயணம் என்பதை நினைவிற்கொள்வது அவசியம். * எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களுடன் இருப்பதாகத் தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார்.* ஜெயங்கொள்வதற்கு அவர் உங்களுக்குக் கிருபையையும், பலத்தையும், தயவையும் தருவார். * எத்தகைய சிரமங்களை நீங்கள் எதிர்கொண்டாலும், கிறிஸ்துவை நம்பி முன்னேறுவதே முதன்மையானது.* முன்னோக்கிச் செல்லும் பாதை இருட்டாகவும், நிச்சயமற்றதாகவும் தோன்றினாலும், அவர்மூலம் மகத்தான வெற்றி உங்களுடையது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.* பலங்கொண்டு திடமனதாயிருங்கள். ஏனென்றால் தேவன் உங்களுக்காக யுத்தம் செய்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சோதனைகளை வெல்ல எனக்கு உதவிச் செய்யும். முன்னோக்கிச் செல்வதற்கும், மகத்தான வெற்றியை உம்மால் அனுபவிப்பதற்கும் தைரியத்தையும், பெலனையும் விடாமுயற்சியையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.