புதன்கிழமை, 21 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார். 1 நாளாகமம் 28:9 உங்கள் உள் மனதின் எண்ணங்கள் வேறுபாடாயிருக்கும்போதும், மற்றவர்களிடம் உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்க நீங்கள் வெகுவாய் முயற்சி செய்பவரா? நீங்கள் ஒரு நல்ல மனிதராய் நடித்தாலும், உங்கள் இருதயத்தின் விருப்பங்களையும், எண்ணங்களையும் தேவன் அறிவார். பிறரைப் பற்றி நீங்கள் உண்மையாய் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் செயல்களுக்குப் பின்னால் உள்ள மனப்பான்மையைத் தேவன் அறிவார். உங்கள் வார்த்தைகள் நேர்மையாய் இருந்தாலும், உங்கள் இருதயம் வேறு ஏதாவதை முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம். உங்கள் வாயில் சொல் பிறவாததற்கு முன்னரே நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைத் தேவன் அறிவார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். தேவன் எப்பொழுதும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற இந்த உண்மையைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தையும், சிந்தனைகளையும் அவரிடம் ஒப்படைத்து, முழுமனதுடன் அவருக்குச் சேவை செய்தால், அவருடைய சொந்த வழியில் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் அவர் திருப்தி செய்வார். தேவனுக்கும், உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்மையாயிருக்கத் தேவனின் உதவியை நாடுங்கள். அப்பொழுது, உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் மாறுவதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கும், மற்றவர்களுக்கும் உண்மையாயிருப்பதற்கும், மாய்மால வாழ்க்கை வாழாமல் இருப்பதற்கும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின்...
“1 நாளாகமம் 28:9 உங்கள் உள் மனதின் எண்ணங்கள் வேறுபாடாயிருக்கும்போதும், மற்றவர்களிடம் உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்க நீங்கள் வெகுவாய் முயற்சி செய்பவரா? நீங்கள் ஒரு நல்ல மனிதராய் நடித்தாலும், உங்கள் இருதயத்தின் விருப்பங்களையும், எண்ணங்களையும் தேவன் அறிவார். பிறரைப் பற்றி நீங்கள் உண்மையாய் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் செயல்களுக்குப் பின்னால் உள்ள மனப்பான்மையைத் தேவன் அறிவார். உங்கள் வார்த்தைகள் நேர்மையாய் இருந்தாலும், உங்கள் இருதயம் வேறு ஏதாவதை முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம். உங்கள் வாயில் சொல் பிறவாததற்கு முன்னரே நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைத் தேவன் அறிவார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். தேவன் எப்பொழுதும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற இந்த உண்மையைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தையும், சிந்தனைகளையும் அவரிடம் ஒப்படைத்து, முழுமனதுடன் அவருக்குச் சேவை செய்தால், அவருடைய சொந்த வழியில் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் அவர் திருப்தி செய்வார். தேவனுக்கும், உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்மையாயிருக்கத் தேவனின் உதவியை நாடுங்கள். அப்பொழுது, உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் மாறுவதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கும், மற்றவர்களுக்கும் உண்மையாயிருப்பதற்கும், மாய்மால வாழ்க்கை வாழாமல் இருப்பதற்கும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

