← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்

“ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். சங்கீதம் 121:7 அன்பு தேவ பிள்ளையே, உலகம் வெகுபொல்லாததாய் மாறிவருகிறது. மேலும், அடுத்த தலைமுறையினரிடையே இருக்கும் பாதுகாப்பற்ற நிலைமைகளைப் பார்ப்பது, கேட்பது மற்றும் அறிந்துகொள்வது எச்சரிக்கக்கூடியதாய் இருக்கிறது. பெற்றோர்களாகவும், பராமரிப்பாளர்களாகவும், நம் குழந்தைகளைத் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் இயல்பான உள்ளுணர்வு நமக்கிருக்கிறது. இருப்பினும், அவர்களை நாம் எப்பொழுதும் பாதுகாக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் இணைய தளத்தைப் பரவலாகப் பயன்படுத்துவதால், நம் அன்புக்குரியவர்களைக் கண்காணிப்பதும் மேற்பார்வையிடுவதும் மிகவும் சாத்தியமற்றது. இணையதளம் ஒரு பரந்த ஆபத்தான இடமாக மாறியுள்ளது. அதில், பட்சிப்போரும், குற்றவாளிகளும் நிழல்களில் பதுங்கி, அப்பாவி மக்களை இரையாக்கக் காத்திருக்கிறார்கள். இணையதளத்தின் அபாயங்களையும், ஆன்லைனில் பாதுகாப்பாயிருப்பது எப்படி என்பதைப் பற்றியும் நாம் நம் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். சிறந்த கல்வி மற்றும் கண்காணிப்பினால் கூட, நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அங்குதான் தேவனின் தேவை வருகிறது. நற்செய்தி என்னவெனில், எல்லாத் தீமைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதாய் அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இயேசுவில் நாம் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் கண்டுகொள்ளலாம். அவரே மேலான பாதுகாவலர். மேலும், நம் அன்புக்குரியவர்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கும்படி அவரை நாம் நம்பலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னையும், என் குடும்பத்தையும் உமது பாதுகாப்பிற்கு ஒப்புக்கொடுக்கிறேன். எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். சங்கீதம் 121:7 அன்பு தேவ பிள்ளையே, உலகம் வெகுபொல்லாததாய் மாறிவருகிறது. மேலும், அடுத்த தலைமுறையினரிடையே இருக்கும் பாதுகாப்பற்ற நிலைமைகளைப் பார்ப்பது, கேட்பது மற்றும் அறிந்துகொள்வது எச்சரிக்கக்கூடியதாய் இருக்கிறது. பெற்றோர்களாகவும், பராமரிப்பாளர்களாகவும், நம் குழந்தைகளைத் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் இயல்பான உள்ளுணர்வு நமக்கிருக்கிறது. இருப்பினும், அவர்களை நாம் எப்பொழுதும் பாதுகாக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் இணைய தளத்தைப் பரவலாகப் பயன்படுத்துவதால், நம் அன்புக்குரியவர்களைக் கண்காணிப்பதும் மேற்பார்வையிடுவதும் மிகவும் சாத்தியமற்றது. இணையதளம் ஒரு பரந்த ஆபத்தான இடமாக மாறியுள்ளது. அதில், பட்சிப்போரும், குற்றவாளிகளும் நிழல்களில் பதுங்கி, அப்பாவி மக்களை இரையாக்கக் காத்திருக்கிறார்கள். இணையதளத்தின் அபாயங்களையும், ஆன்லைனில் பாதுகாப்பாயிருப்பது எப்படி என்பதைப் பற்றியும் நாம் நம் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். சிறந்த கல்வி மற்றும் கண்காணிப்பினால் கூட, நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அங்குதான் தேவனின் தேவை வருகிறது. நற்செய்தி என்னவெனில், எல்லாத் தீமைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதாய் அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இயேசுவில் நாம் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் கண்டுகொள்ளலாம். அவரே மேலான பாதுகாவலர். மேலும், நம் அன்புக்குரியவர்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கும்படி அவரை நாம் நம்பலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னையும், என் குடும்பத்தையும் உமது பாதுகாப்பிற்கு ஒப்புக்கொடுக்கிறேன். எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும். ஆமென்.