← செய்திகளுக்குத் திரும்பு
பயங்கரமும், பராக்கிரமுமான கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

பயங்கரமும், பராக்கிரமுமான கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார்

“சனிக்கிழமை, 23 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள். எரேமியா 20:11 அன்பு தேவ பிள்ளையே,நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்களா? நீங்கள் தனியே இல்லை. தேவன் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் உபத்திரவத்தின் தருணங்களை அனுபவித்தாலும், இன்று திடன் கொள்ளுங்கள். உங்களைத் துன்புறுத்துவோர் மேல் கவனம் செலுத்தாமல், உங்கள் கண்களை இயேசுவின் மேல் பதிய வையுங்கள். உங்கள் தேவன் உங்களுக்காக நீதியைச் சரிக்கட்டி, உங்களுக்காகப் பழிவாங்குவார். உங்களைத் துன்புறுத்துவோர்க்கும், உங்களுக்குத் தீங்கு விளைவிக்க அவர்கள் செய்யும் முயற்சிகளுக்கும் இறுதியில் தோல்வியே கிடைக்கும். புடமிடப்பட்ட பொன்னைப்போல் சோதனைகளினின்று நீங்கள் வெளிப்படுவீர்கள். நீங்கள் தாக்கம் நிறைந்த மனிதராயும் பலருக்கு முன்மாதிரியாயும் மாறுவீர்கள். உங்கள் வாழ்க்கை, அநேக ஜனங்களைத் தேவனிடமும் அவரது இரட்சிப்பிற்கு நேராயும் ஈர்த்துத் தேவனின் அன்பிற்குச் சாட்சியளிக்கக் கூடியதாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்தச் சோதனையான தருணங்களில், உம்மில் நம்பிக்கையிழக்காமல் சோதனையைச் சகித்துக்கொளள எனக்கு கிருபை தாரும். என் வாழ்க்கை பரிசுத்தமாயும், உமக்குப் பிரியமாயும் இருக்கட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள். எரேமியா 20:11 அன்பு தேவ பிள்ளையே,நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்களா? நீங்கள் தனியே இல்லை. தேவன் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் உபத்திரவத்தின் தருணங்களை அனுபவித்தாலும், இன்று திடன் கொள்ளுங்கள். உங்களைத் துன்புறுத்துவோர் மேல் கவனம் செலுத்தாமல், உங்கள் கண்களை இயேசுவின் மேல் பதிய வையுங்கள். உங்கள் தேவன் உங்களுக்காக நீதியைச் சரிக்கட்டி, உங்களுக்காகப் பழிவாங்குவார். உங்களைத் துன்புறுத்துவோர்க்கும், உங்களுக்குத் தீங்கு விளைவிக்க அவர்கள் செய்யும் முயற்சிகளுக்கும் இறுதியில் தோல்வியே கிடைக்கும். புடமிடப்பட்ட பொன்னைப்போல் சோதனைகளினின்று நீங்கள் வெளிப்படுவீர்கள். நீங்கள் தாக்கம் நிறைந்த மனிதராயும் பலருக்கு முன்மாதிரியாயும் மாறுவீர்கள். உங்கள் வாழ்க்கை, அநேக ஜனங்களைத் தேவனிடமும் அவரது இரட்சிப்பிற்கு நேராயும் ஈர்த்துத் தேவனின் அன்பிற்குச் சாட்சியளிக்கக் கூடியதாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்தச் சோதனையான தருணங்களில், உம்மில் நம்பிக்கையிழக்காமல் சோதனையைச் சகித்துக்கொளள எனக்கு கிருபை தாரும். என் வாழ்க்கை பரிசுத்தமாயும், உமக்குப் பிரியமாயும் இருக்கட்டும். ஆமென்.