ஞாயிறு, 14 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. எண்ணாகமம் 23:21 தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்ததன் மூலம் தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறாரா என்ற கேள்வியைக் கேட்கிறீர்களா?அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் ஜெபத்தின் மூலமும் அவருடன் ஐக்கியங்கொள்ள முயற்சித்தும், தேவ பிரசன்னத்தை உணர முடியாத ஆவிக்குரிய வறட்சியில் உங்களைக் காண்கிறீர்களா?நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கைவிடப்பட்டதாகவும் உணருகிறீர்களா? இந்தச் சவால்களின் மத்தியிலும் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க உங்களை ஊக்குவிக்கிறேன். அவர் உங்களுடன் இருப்பதாகவும், உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்றும் வாக்குப்பண்ணியிருக்கிறார். நீங்கள் அவருடைய பிரசன்னத்தை உணரப் போராடினாலும், அவர் உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார். அவருடைய வழிகாட்டலைப் பின்பற்றுவதில் உறுதியாய் இருந்து, உங்கள் நம்பிக்கையில் ஒருபொழுதும் தளராதீர்கள். அதி சீக்கிரத்தில் அவர், உங்கள் நிலைமையைப் புலம்பலுக்குப் பதிலாய் ஆன்ந்தக் களிப்பாய் மாற்றுவார். ராஜாவின் ஜெய கெம்பீரம் உங்கள் வாழ்நாள் முழுவதும் காணப்படும். திடன் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நித்திய பிரசன்னத்திற்காக நான் நன்றியுள்ளவனா(ளா)ய் இருக்கிறேன். ஆமென்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருக்கிறார்; ராஜாவின்...
“ஞாயிறு, 14 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. எண்ணாகமம் 23:21 தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்ததன் மூலம் தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறாரா என்ற கேள்வியைக் கேட்கிறீர்களா?அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் ஜெபத்தின் மூலமும் அவருடன் ஐக்கியங்கொள்ள முயற்சித்தும், தேவ பிரசன்னத்தை உணர முடியாத ஆவிக்குரிய வறட்சியில் உங்களைக் காண்கிறீர்களா?நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கைவிடப்பட்டதாகவும் உணருகிறீர்களா? இந்தச் சவால்களின் மத்தியிலும் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க உங்களை ஊக்குவிக்கிறேன். அவர் உங்களுடன் இருப்பதாகவும், உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்றும் வாக்குப்பண்ணியிருக்கிறார். நீங்கள் அவருடைய பிரசன்னத்தை உணரப் போராடினாலும், அவர் உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார். அவருடைய வழிகாட்டலைப் பின்பற்றுவதில் உறுதியாய் இருந்து, உங்கள் நம்பிக்கையில் ஒருபொழுதும் தளராதீர்கள். அதி சீக்கிரத்தில் அவர், உங்கள் நிலைமையைப் புலம்பலுக்குப் பதிலாய் ஆன்ந்தக் களிப்பாய் மாற்றுவார். ராஜாவின் ஜெய கெம்பீரம் உங்கள் வாழ்நாள் முழுவதும் காணப்படும். திடன் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நித்திய பிரசன்னத்திற்காக நான் நன்றியுள்ளவனா(ளா)ய் இருக்கிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

