← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரைச் சேவிக்க ஆர்வமிக்கவராய் இருங்கள். அவர்மேலுள்ள உங்கள் தாகம் தீச்சுவாலையாய் எரியட்டும்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரைச் சேவிக்க ஆர்வமிக்கவராய் இருங்கள்.

“வியாழன், 30 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். ‭‭ரோமர்‬ ‭12:11‬ ‭(TCV‬‬) உங்கள் கைக்கு எது கிடைத்திருக்கிறதோ அதை ஆர்வமிக்கவராய் செய்யுங்கள். ஏனெனில், இலட்சக்கணக்கான மனிதர்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வாய்ப்பும், ஆரோக்கியமும் பெலனும் இல்லாமல் தவிக்கின்றனர். விரும்பத் தகாத சூழ்நிலைகளினிமித்தமும் பின்னடைவுகளினிமித்தமும் எரிச்சல்கொண்டு கோபமடையாதீர்கள். இருப்பது போதுமென்ற மனதோடிருந்து, உங்கள் கடமைகளையெல்லாம் சிறப்பாய்ச் செய்யப் பிரயாசப்படுங்கள். # பிறர் நன்றாய் உழைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தித் தூண்டிவிடவும் ஆர்வமிக்கவராய் இருங்கள். இது, சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பரவச்செய்து உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் சூழ்நிலையைத் தலைகீழாய் மாற்றுகிறது.# ஒருவரது ஆர்வம், அவரது பணி முயற்சிகளின் தரத்திலும், ஒரு நோக்கத்திற்காக அவர்கள் திரட்டும் உதவி மற்றும் உறுதுணையின் எண்ணிக்கையிலும், ஒரு பணியை நிறைவேற்றி முடிப்பதற்கான அவர்களது அர்ப்பணிப்பிலும் பிரதிபலிக்கிறது. # உங்கள் பணியையும் ஊழியத்தையும் குறித்து இன்று எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்கிறீர்கள்?# கர்த்தருக்காக இன்னும் அதிகமாய்ச் செயல்படுவதற்கான உங்கள் அர்ப்பணிப்பைத் தக்கவைத்துகொண்டு, பின்வரும் சந்ததிகளுக்கு அந்த ஆர்வத்தை ஒரு பொக்கிஷமாய்ப் பின்வைத்துச் செல்லுங்கள்# உங்கள் நாட்களையும், வாய்ப்புகளையும், பணி செய்வதிலும் பிறருக்கு உதவுவதிலும் களிகூர்ந்து அனுபவியுங்கள்.# உங்களது ஆர்வம், இயேசுவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாய் வாழ உங்களைச் சுற்றியுள்ளோரை ஊக்குவித்துச் சவால் விடுவதாக. ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, நான் செய்வதெல்லாவற்றிலும் ஆர்வமிக்கவராய் இருக்க எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 30 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். ‭‭ரோமர்‬ ‭12:11‬ ‭(TCV‬‬) உங்கள் கைக்கு எது கிடைத்திருக்கிறதோ அதை ஆர்வமிக்கவராய் செய்யுங்கள். ஏனெனில், இலட்சக்கணக்கான மனிதர்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வாய்ப்பும், ஆரோக்கியமும் பெலனும் இல்லாமல் தவிக்கின்றனர். விரும்பத் தகாத சூழ்நிலைகளினிமித்தமும் பின்னடைவுகளினிமித்தமும் எரிச்சல்கொண்டு கோபமடையாதீர்கள். இருப்பது போதுமென்ற மனதோடிருந்து, உங்கள் கடமைகளையெல்லாம் சிறப்பாய்ச் செய்யப் பிரயாசப்படுங்கள். # பிறர் நன்றாய் உழைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தித் தூண்டிவிடவும் ஆர்வமிக்கவராய் இருங்கள். இது, சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பரவச்செய்து உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் சூழ்நிலையைத் தலைகீழாய் மாற்றுகிறது.# ஒருவரது ஆர்வம், அவரது பணி முயற்சிகளின் தரத்திலும், ஒரு நோக்கத்திற்காக அவர்கள் திரட்டும் உதவி மற்றும் உறுதுணையின் எண்ணிக்கையிலும், ஒரு பணியை நிறைவேற்றி முடிப்பதற்கான அவர்களது அர்ப்பணிப்பிலும் பிரதிபலிக்கிறது. # உங்கள் பணியையும் ஊழியத்தையும் குறித்து இன்று எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்கிறீர்கள்?# கர்த்தருக்காக இன்னும் அதிகமாய்ச் செயல்படுவதற்கான உங்கள் அர்ப்பணிப்பைத் தக்கவைத்துகொண்டு, பின்வரும் சந்ததிகளுக்கு அந்த ஆர்வத்தை ஒரு பொக்கிஷமாய்ப் பின்வைத்துச் செல்லுங்கள்# உங்கள் நாட்களையும், வாய்ப்புகளையும், பணி செய்வதிலும் பிறருக்கு உதவுவதிலும் களிகூர்ந்து அனுபவியுங்கள்.# உங்களது ஆர்வம், இயேசுவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாய் வாழ உங்களைச் சுற்றியுள்ளோரை ஊக்குவித்துச் சவால் விடுவதாக. ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, நான் செய்வதெல்லாவற்றிலும் ஆர்வமிக்கவராய் இருக்க எனக்கு உதவும். ஆமென்.